10/12/2012

| |

தியாவ் யூ தீவுச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கு சீனாவின் முயற்சி

தியாவ் யூ தீவுப் பிரச்சினை தொடர்பான சீன-ஜப்பானிய துணை வெளியுறவு அமைச்சர்களின் புதிய சுற்று கலந்தாய்வுக்கு ஆயத்தம் செய்யும் பொருட்டு, சீன வெளியுறவு அமைச்சின் ஆசியப் பிரிவுத் தலைவர் லுவோ ட்சாங் ஹுய் அக்டோபர் 11ம் நாள் ஜப்பானில் பயணம் மேற்கொண்டார். தியாவ் யூ தீவு சர்ச்சை பற்றி அவர் ஜப்பானிய வெளியுறவு அமைச்சின் அலுவலர் சுஜியமா ஷின்சுகெவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். 
சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார். அண்மைக்காலத்தில் இரு தரப்புகளும் துணை வெளியுறவு அமைச்சர்களின் புதிய சுற்று கலந்தாய்வை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பானியத் தரப்பு, தவறைத் திருத்தும் நல்லெண்ணத்தைக் காட்டி, நடைமுறையாகும் நடவடிக்கைகளை செயல்படுத்தி, இக்கலந்தாய்வில் முன்னேற்றம் அடைவதற்குப் பாடுபட வேண்டும் என சீன விரும்புவதாக அவர் தெரிவிதத்தார்.