10/01/2012

| |

மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் வீட்டில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு இம்முறை கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான கோவிந்தன் கருணாகரமின் (ஜனா) வீட்டில் இருந்து கிரனைட் குண்டுகள் இரண்டு பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு செட்டிப்பாளையம் பகுதியிலுள்ள இவரது தாயின் வீட்டின் வீட்டின் உள்பகுதியில் இருந்தே இக் குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட குண்டுகள், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மூலமாக செயலிழக்கப்பட்டுள்ளன.

 நாம் பலதடவைகள் தெரிவித்திருந்தோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பயங்கரவாதிகள் என! அவர்களின் விடயத்தில் அரசாங்கம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் ஆலோசனையும் கூறியிருந்தோம். ஜனா மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அரியனேந்திரன் பற்றியும், அவரின் கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் நாம் பல தடவைகள் எமது செய்தித் தளத்தில் விபரித்திருந்தோம். எனவே கிழக்கில் மீண்டும் இன வன்முறையினையும், கலவரத்தினையும் உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் தம்மை தயார்்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்மீதும் அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடவேண்டிய காலம் இதுவாகும்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து நேற்று அதிகாலை 3.00 மணியளவில் செட்டிப்பாளையத்திலுள்ள மேற்படி உறுப்பினரின் இல்லத்திலிருந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்டது.
இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் இடப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினரின் வீட்டு வளாக மதிலோரத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக உறுப்பினரின் மைத்துனர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கைக்குண்டு மீட்டெடுக்கப்படும் வேளை மாகாண சபை உறுப்பினர் வீட்டில் இருக்கவில்லை. அவர் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை சென்றிருந்ததாக பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.