மட்டக்களப்பின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதால் அதில் கலந்து கொள்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இப்பாலம் 210 மீற்றர் நீளமாகவும் 9.8 மீற்றர் அகலமாக அமையவுள்ளதுடன், மேற்குப் பக்கம் 195 மீற்றர் அத்துடன் கிழக்குப் பக்கம் 293 மீற்றர் நீளமும் கொண்ட தாம்போதிகளும் அமையவுள்ளன. இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்படவுள்ளது.