10/16/2012

| |

பொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழங்க வேண்டும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா செலுத்த வேண்டுமென களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும தெரிவித்துள்ளார். 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையிலிருந்த காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் சலவைக் குழுவில் வேலை வழங்கப்பட்டார். இருப்பினும் சரத் பொன்சேகா செய்த வேலைக்கான சம்பளத்தில் 60 ரூபாவை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் கூறினார். 
முன்னாள் இராணுவத் தளபதி சிறைச்சாலையிலிருந்து வெளியேறுதவதற்கு முன்பாக இதற்கான பணத்தை கோரியதாகவும் இருப்பினும் இப்பணத்தை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தவறியுள்ளதெனவும் அவர் கூறினார்.