இன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திட்டத்தின் 4ம் கட்ட பணிகள் உத்தியோகபூர்வமாக மு.பகல் 10.11க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனடிப்படையில் ; சமுர்த்தி திவிநெகும வாழ்வாதார கருத்தி;ட்டங்களை கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வாழைச்சேனை விநாயகபுரம் கிராம சேவையாளர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு நல்லின நாட்டாடுகளை வழங்கி வைத்தார். வாழைச்சேனை விநாயகபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளியான சிவநேசன் ஆடுகளை முன்னாள் முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொள்வதனைப் படத்தில் காணலாம். இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சமுர்த்தி முகாமையாளர் மற்றும் அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலகத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.