10/18/2012

| |

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது



சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35 சிங்களவர்கள் நேற்று  அதிகாலை கடற்பபடையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இசுறு புத்தா என்ற படகின் மூலமாக தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.


இவ் 35 பேரும் ஹந்தர கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.