இரண்டாவதாக அமையப் பெற்ற கிழக்கு மாகாண சபையின் முதல்நாள் நிகழ்வு இன்று சம்பிரதாயமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலபதி ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டார்.அத்தோடு பிரதி தவிசாளராக எம்.எஸ்.சுபைர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்.இதன் பின்னர் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம் பெற்றது. மேலும் புதிதாக அமையப் பெற்ற கிழக்கு மாகாண சபையிலே நன்றி தெரிவிக்கும் முகமாக ;முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,கட்சியின் தலைவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரும் தமது நன்றியை தெரிவித்தார்கள். நாளை மீண்டும் 9.30 சபை கூடும்.