மட்டக்களப்பு, மண்முனைத்துறையில் 1600 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் அமைக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்வழி போக்குவரத்துப்பாதையான மண்முனை—கொக்கடிச்சோலையை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்படுவதால் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை மற்றும் மீள்குடியேறிய கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்டையடையவுள்ளனர். ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இப்பாலத்தின் நிர்மாணப்பாணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.