தாய்லாந்து நாட்டில் 100 வருடங்களுக்கு முன்பு ஒரு லட்சம் புலிகள் இருந்தன. சமூக விரோதிகள் வேட்டையால் பெரும்பாலான புலிகள் அழிக்கப்பட்டு தற்போது 3200 புலிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனாலும் புலி வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
புலிகள் முற்றிலும் அழிந்து விடாமல் தடுக்க இப்போதுதான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லாவோஸ் நாட்டு எல்லையில் உள்ள கான்கான் என்ற இடத்தில் ஒரு வேனில் கடத்திச் சென்ற 16 புலிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த வேனை ஓட்டி சென்றவர் பிடிபட்டார்.
ஆனால் அவர், சிலர் இந்த புலிகளை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்குமாறு பணம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே கடத்தல்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட 16 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரத்தில் இருந்து 2 மாதங்கள் ஆனவை ஆகும். இவற்றை லாவோஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.