10/16/2012

| |

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 11 பேர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  
மாத்தறை குடாவெல்ல கடற்பரப்பிலிருந்து 93 மைல் தூரத்தில் வைத்து கடற்படையினரால் கடந்த ஞாயிறு அன்று (14.10.2012) கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதான இவர்கள் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
இவர்கள் நாக்குலுகமுவ, குடாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.