அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 11பேரை நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவர்கள் மூவரை சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மேற்படி 11பேரில் 8பேரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் தங்காலை நீதவான் யுரேகா துலானி உத்தரவிட்டுள்ளார். மேற்படி 14பேரும் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை தங்காலை நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் மேற்படி நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.