எச்சரிக்கை விடுக்கிறார் நீதியமைச்சர் ஹக்கீம்
மு.கா சர்வதேசத்தையோ ஆட்சியாளர்களையோ நம்பவில்லை
தமிழ் முஸ்லிம் சமுகங்களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என் பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தரமானதொரு தீர்வு சாத்தியமாகும். சர்வதேசம் அனைத்தினையும் வென்று தந்துவிடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது.
மு.காங்கிரஸ் சர்வதேசத்தினையும் நம்பவில்லை. ஆட்சியாளர்களையும் நம்பவில்லை. எங்களுடைய மக்களையே நாம் நம்புகின்றோம். என்று மு.கா தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டி யிடவில்லை என்ற காரணத்தினால் சில ரால் தமிழ் பிரதேசங்களில் இலகுவாக தேர்தல் மோசடிகளைச் செய்ய முடிந்தது. அதனால்தான், கடந்த தேர்தலில் பலரால் வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றிபெற முடிந்தது.
கடந்த கிழக்குத் தேர்தலில் நிலவிய அசாதாரணமான சூழல் இந்தத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. காரணம் தேர்தல் ஆணையாளர் இறுக்கமான உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். அரசாங்கத்துக்கு 18ஆவது சட்டத் திருத்தம் என்கிறதொரு மிகப்பெரும் கைங்கரியத்துக்கு மு.கா துணை போயிருக் கிறது. அது சாமானியமான விடயமல்ல. இதை அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேச சமூகம் தன்னுடைய தேவைக்கு தமிழ்த் தேசியத்தைப் பாவிப்பதற்கு முயற்சிக்கின்றது. வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது.
ஆனால், மு.காங்கிரஸ் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கிறது. தமிழ் முஸ்லிம் சமூகங் களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தர மானதொரு தீர்வு சாத்தியமாகும். ஆனால் அது நடக்கக் கூடாது என்று பேரினவாதம் நினைக்கலாம் என்றார்.