தியாவ்யு தீவு பற்றிய வெள்ளை அறிக்கையை" சீன அரசவை செய்தி அலுவலகம் 25ம் நாள் வெளியிட்டது. தீயாவ்யூ தீவு மற்றும் அதோடு இணைந்த தீவுகள், சீனாவின் உரிமைப் பிரதேசங்களிலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதியாகும் என்பதை இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த வெள்ளையறிக்கை மூலம், தியாவ்யூ தீவு, சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசம் என்பதை மேலும் விவரித்து, அதன் இறையாண்மையை சீனத் தரப்பு பேணிகாக்கும் மனவுறுதியையும் நம்பிக்கையையும் சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
"தியாவ்யூ தீவு, சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசம் என்பதை வலியுறுத்தும் இவ்வெள்ளை அறிக்கையில் சுமார் 7 ஆயிரம் எழுத்துக்கள் இடம்பெறுகின்றன.
சீனச் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தின் துணைத் தலைவர் திரு லியு யூ ஃபா செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். வரலாறு, நிலவியல், சட்டம் ஆகிய கோணங்களிலிருந்து பார்த்தால், தியாவ்யூ தீவு சீனாவின் உரிமைப் பிரதேசமாகும். அதன் மீது சர்ச்சை கொள்ள இயலாத அரசுரிமை சீனாவுக்கு உண்டு என இவ்வெள்ளை அறிக்கை கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஜப்பானியத் தரப்பு, எந்த முறையிலும் தியாவ்யூ தீவு மீதான சீனாவின் இறையாண்மையை மீறுவதை சீனா உறுதியாக எதிர்த்து, தடுக்கும். தியாவ்யூ தீவுப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது, நிலையானது. நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை சீனா பேணிகாக்கும் மனவுறுதியும், உலக பாசிச எதிர்ப்பு போரின் வெற்றி பயனை பேணிகாக்கும் மனவுறுதியும் உறுதியானது என்று வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தியாவ்யூ தீவின் அரசுரிமையை பேணிகாக்கும் மனவுறுதியையும் நம்பிக்கையையும் சர்வதேச சமூகத்துக்கு சீன அரசு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றும், தியாவ்யூ பிரச்சினையைக் கையாள்வதில் சீனாவின் நிலையான நிலைப்பாட்டைத் இது தெளிவுபடுத்தியுள்ளது என்றும் லியு யூ ஃபா கருத்துத் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய உரிமைப் பிரதேசம் பற்றி சீனா வெள்ளையறிக்கையை வெளியிட்டது இது முதன்முறையாகும். அதிகாரப்பூர்வ ஆவணமான வெள்ளை அறிக்கை சீன அரசின் நிலைப்பாட்டின் அடையாளமாகும் என்று லியு யு ஃபா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சீன அரசு முதன்முறையாக வெள்ளை அறிக்கையின் முறையிலும், கொள்கை விளக்கம் என்ற முறையிலும், சர்வதேச சமூகத்துக்கு தியாவ்யூ தீவுப் பிரச்சினை பற்றி சீனாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கொள்கை முறையில் அரசின் நிலைப்பாட்டை விவரிப்பது, வெளியுறவு அமைச்சின் அறிக்கையை விட மேலும் முக்கியமானது" என்றார் அவர்.