9/16/2012

| |

மகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்றோர்

ஜேர்மனியில் மூச்சு விட இயலாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த 12 வயது சிறுவன் மாரியசுக்கு,அவனது பெற்றோர் தங்களது நுரையீரலை கொடுத்து உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
ஹேனாவர் மெடிக்கல் பல்கலைகழகத்தில் இந்த சிறுவனுக்கும்,பெற்றோருக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து மருத்துவர் கிரிகோர் வார்னெக் கூறுகையில்,பெற்றோரின் நுரையீரல்கள் மிகப் பெரியதாய் இருந்ததால் சிறுவனுக்கு சரியாக பொருந்தின. அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது.

மாரியஸ் 155 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் மாரியஸ் கால்பந்து விளையாடலாம்,பைக் ஓட்டலாம். ஆனால் அவனது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால்,தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும். அவனுக்கிருந்த நோய்த்தொற்றும்,சளித்தொல்லையும் புதிய நுரையீரல்களையும் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த நோய் பெரும்பாலும் ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.