தியாவ்யூ தீவு பற்றி சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடை சர்ச்சை தீவிரமாகி வருவதுடன், சீன-ஜப்பானிய பொருளாதார உறவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் பொருளாதார மீட்சிக்காலம், எதிர்பார்ப்பதை விட 6 திங்கள் அதிகமாகக்கூடும் என்று ஜப்பானிய மத்திய வங்கித் தலைவர் 19ம் நாள் தெரிவித்தார். தியாவ்யூ தீவு சர்ச்சையால், இரு நாடுகளுக்கிடை நேரடி ராணுவ மோதல் ஏற்படும் சாத்தியக்கூறு குறைவாக இருக்கிற போதிலும், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடை பலப்போட்டி தீவிரமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது, தியாவ்யூ தீவு பிரச்சினையினால் இரு நாட்டுறவு பதட்டமாகி வருகிறது. பொருளாதார வர்த்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கிடை ஒத்துழைப்பை இது கடுமையாக சீர்குலைத்துள்ளது.
சீன-ஜப்பானிய உறவுக்கு பாதிப்பு ஏற்பட்டதும், முதலில் இரு நாடுகளும் பொருளாதாரத் துறையில் போட்டியிடும் என்றும், சீனா மூன்று துறைகளில் ஜப்பானை கட்டுப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
முதலாவது, சீனாவில் முதலீடு செய்யும் ஜப்பானிய தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை விதிக்கக்கூடும். சீனாவின் மாபெரும் நுகர்வு சந்தையும், மலிவான உழைப்பாற்றலும், ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதை நீண்டகாலமாக ஈர்த்து வருகின்றன. சீனாவின் பெரிய சந்தை, சீனப் பணியாளர்களின் தகுநிலை உயர்வு ஆகிய காரணங்களால், பல ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் உள்ள ஆய்வு மையம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை ஒதுக்கி வைத்துள்ளது.
இரண்டாவது, சீன-ஜப்பானிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தக்கூடும். சீனப் பொருளாதாரத்தின் மீதான ஜப்பானின் சார்ப்பளவு அதிகம். தவிர, சீனா ஜப்பானுக்கு குறைந்த கூட்டு மதிப்புள்ள பொருட்களை முக்கியமாக ஏற்றுமதிச் செய்கிறது. சீனா ஜப்பானுக்கு தடை விதித்தால், ஜப்பானுக்கு கடும் இழப்புக்கள் ஏற்படக்கூடும்.
மூன்றாவது, ஜப்பானிய அரசின் கடன் சுமை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை, ஜப்பானிய அரசின் கடன், பத்து கோடியே கோடி யென்னைத் தாண்டியது. 2011ஆம் ஆண்டு இறுதி வரை, 18 லட்சம் கோடி யென் ஜப்பானிய அரசு கடனை சீனா கொண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு, சீனா, ஜப்பானின் கடன்களை மிக அதிகமாக கொண்டுள்ள நாடாக மாறிய து. சீனா, ஜப்பானின் அரசுக் கடன் பிரச்சினையைப் பயன்படுத்தி, அச்சுறுத்தும் வகையில் ஜப்பான் மீது தடை விதிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.