9/17/2012

| |

அம்பாறையில் தொல்பொருள் அகழ்வு

அம்பாறை,உஹன பகுதியில் தொல்பொருள் உள்ள இடங்களை தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்காக 400 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளளார்.

இங்கு பெரும் எண்ணிக்கையிலான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.