ஒரே சூலில் பிறந்த சிறுவர்கள் நால்வரை ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் இலகுவாக இனங்கண்டுகொள்வதற்காக அவர்களது தலையில் தலைமயிரில் வெவ்வேறான இலக்கங்கள் வடிவமைக்கப்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
6 வயதான இம்மாணவர்கள், சீனாவின் தென்பிராந்தியமான குவாங்டோங் மாகாணத்தில் சென்ஸென் நகரில் அமைந்துள்ள பாடசாலையில் தமது ஆரம்ப கல்வியை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை முதல் நாளிலேயே ஆசிரியர்கள் இவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காண வேண்டுமென்பதற்காக இச்சிறார்களின் தாயார் இத்தகைய செயற்பாட்டில் ஈடுட்டுள்ளார்.
ஜியங் யுங்லோங், ஜியங் யுங்ஸியாவோ, ஜியாங் யுன்ஹாங், ஜியங் யுன்லின் என இச்சிறார்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேற்படி சிறுவர்களின் தந்தைக்கும் இவர்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமமாக இருந்துள்ளது.
மேற்படி சிறுவர்களின் பெற்றோர் செல்வந்தர்களாக இல்லாதபோதும் இச்சிறுவர்கள் முறையாக கல்வி கற்க வேண்டுமென அவர்களின் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.