9/21/2012

| |

காத்தான்குடியில் ஹர்த்தால்

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின்  காத்தான்குடியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டிக்கும் வகையிலேயே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக  காத்தான்குடி நகரசபைத் தலைவர் ஏ.எச்.எம்.அஷ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமாசபை, நகரசபை உட்பட பல பொது அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

நகரிலுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன், வங்கிகள், அலுவலகங்கள், பாடசாலைகள் உட்பட தனியார் அரசக்ங்க நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.