ஒரு சமூகத்தின் அடிகட்டுமானமாக உள்ளது அரசியல் அதிகாரமாகும். அவ் அரசியல் அதிகாரத்தினை பேணி பாதுகாத்து தக்கவைப்பதன் மூலமே குறித்த சமூகம் தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கிழக்கு மாகாண தமிழர்கள் மாகாண சபையில் அரசியல் அதிகார இருப்பை இழந்து நிற்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக வாக்களியுங்கள் என்று கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முஸ்லிம் தேசியத்தினையும்,சிங்கள தேசியத்தினையும் இணைத்து ஆட்சி அமைக்கச் செய்து எதிகட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அரசியல் ஆலோசனை வழங்குகின்றது. இதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். எச் சமூகம் அதிகார பகிர்வு கேட்டு போராடியதோ, அச் சமூகத்தினை எதிர் கட்சி ஆசனத்தில் இருத்தி விட்டு மாகாணசபையில் ஆளும் கட்சி முறையினை இல்லாமல் செய்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ,பிள்ளையானோ மட்டக்களப்பையும்,கிழக்கு மக்களையும் விட்டு,விட்டு ஓடப் போவதில்லை.
மக்களுக்காக சேவை செய்ய தயாராகவே இருக்கின்றோம்.
முதல் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக மாறி இருக்கிறதே தவிர
வேறு எது வித மாற்றமும் இல்லை.
எந்த பிள்ளையானை இல்லாமல் செய்ய வேண்டும் என்று யார்ல் தலைமைத்துவங்கள் எல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு கிழக்கு நோக்கி படையெடுத்ததோ, அந்த பிள்ளையானை மட்டக்களப்பு மக்கள் ஏமாற்றவில்லை. என்பதனை குறித்த தலைமைத்துவங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சம்பந்தர் அவர்களுக்கு,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழ் தேசியம்,வட-கிழக்கு இணைப்பு என்று கோஷமிட்டு கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்கள் முடிந்தால் 03 வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசியத்தினை பெற்றுக்
கொடுக்க வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண மாகாண சபை முறைமையினை ஏற்று கொண்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஏமாற்றும் அரசியலை கை விட்டு ஒதுங்கவேண்டும். என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளி கிழமை(28.09.2012) மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.