போலி இலக்கத் தகடுகளுடன் நடமாடும் வாகனங்களை கண்டறிவதற்கான சோதனைகளை பொலிஸார் அதிகரித்துள்ளனர்.
கடந்த 8 மாத காலத்தில் போலி இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களை பயன்படுத்தியமைக்காக 250 இற்கும் அதிகமான நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதன் மேற்படி வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஒருசமயத்தில், ஜீப்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான சொகுசு வாகனங்கள் வி.ஐ.பி.களுக்குரியதைப் போன்ற இலக்கத் தகடுகளுடன் நடமாடியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து விசாரிப்பதற்கு பொலிஸார் தயங்கியதாகவும், ஆனால் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதையடுத்து, பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக எந்த நபரையும் அவர்களின் அந்தஸ்து பாராமல் கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதையடுத்து போலியான இலக்கத் தகடுகள் பயன்படுத்தியமை மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டதாக அவ்வதிகாரி கூறினார்.