9/25/2012

| |

சீனப் பொருளாதார நிலைமை

சீன வங்கியின் சர்வதேச நிதி ஆய்வகம், 2012ஆம் ஆண்டு 4வது காலாண்டு பொருளாதார நிதிக் கூட்டத்தைச் செப்டம்பர் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. சீனப் பொருளாதாரம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து மீட்சி பெற்று ஏற்றமடையும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். கொள்கைகள் உள்ளிட்ட காரணங்களால், 4வது காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு வேகம் 8.2 விழுக்காடு எட்டக் கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சீனப் பொருளாதாரம் மிகத் தாழ்வான நிலையை எட்டியுள்ளது. கடந்த 3 திங்கள்களில், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் முதலீடு தொகை அதிகரித்துள்ளது. அத்துடன், விற்பனைத் தொகை ஓரளவு மீட்சியடைந்து ஏற்றமடைந்துள்ளது என்று சீன வங்கியின் முதன்மை பொருளியலாளர் சாவ் யுவான்ட்செங் தெரிவித்தார்.