9/16/2012

| |

ரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை




ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சிலை அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்இ ஸ்டீவ் ஜாப்சின் உருவச்சிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலரிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.

தற்போது மொத்தம் 25 டிசைன்கள் வந்துள்ளது.
நடுவர்கள் குழு நினைவுச்சிலைகள் குறித்து வந்துள்ள டிசைன்களில் ஒன்றை தெரிவு செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதே போன்று ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் ஜாப்சுக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் நாட்டின் ஷா பாலோ நகரத்திற்கு அருகில் உள்ள ஜூண்டியாய் நகரத்திற்கு ஸ்டீவ் ஜாப்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.