9/19/2012

| |

கம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால்

தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.
இதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வேலியுடன் வடிவமைக் கப்பட்டு வருகின்றன. இதனால், புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எதனையும், இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட முடியாது.
ஏற்கனவே பதிந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, அப்டேட் செய்திடவும் முடியாது. அப்படியானால், எப்படித்தான், நம் கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராமிடமிருந்து காப்பாற்றுவது? மால்வேரை அழிப்பது?
வேறு வழியில்லை; அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை சிடியில் இருந்தவாறே இயக்க வேண்டியதுதான். கம்ப்யூட்டரை இயக்கவும் முடியாமல், மால்வேர் முடக்கிவிட்டால் என்ன செய்திடலாம்?
பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்துடனேயே (bootable malware scanners) கிடைக்கின்றன. இவற்றை, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், இணையத்திலிருந்து சிடியில் பதிவு செய்து, எடுத்து வந்து, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் சிடி ட்ரைவ் மூலம் இயக்கி, மால்வேரை நீக்கலாம்.
சிடி மட்டுமின்றி, பிளாஷ் ட்ரைவில் பதிந்து கூட இதே போல இயக்கலாம். இந்த வகையில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் சிறப்பாக இயங்குகின்றன. அவை “காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க்’ மற்றும் “எப்செக்யூர் ரெஸ்க்யூ சிடி’. இவை இயக்குவதற்கு எளிது என்பதுடன், தயாரித்த நிறுவனத்தால், பல்வேறு சோதனைகளுக்குட் படுத்தப்பட்டு கிடைக்கின்றன.
இவற்றின் தள முகவரிகள்:
http://support.kaspersky.com/viruses/rescuedisk/
http://www.fsecure.com/en/web/labs_global/removaltools//carousel/view/142
இந்த இரண்டு புரோகிராம்களும் ஐ.எஸ்.ஓ. பைல்களாக, இந்த தளங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மீது கிளிக் செய்தவுடன், ஒரு யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டு, சிடியில் இதனை பதிவதற்கென வழி நடத்துகிறது.
இதன் மூலம் பதிந்து எடுக்க இயலவில்லை என்றால், Active@ ISO Burner என்ற யுடிலிட்டி புரோகிராம் மூலம், சிடியில் பதிந்து எடுக்கலாம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின்னர், மேலே கூறப்பட்ட ஐ.எஸ்.ஓ. பைல் மீது டபுள் கிளிக் செய்து, சிடியில் அதனைப் பதிய வேண்டும்.
இவற்றை யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்தும் இயக்கலாம். ஆனால், இந்த ஐ.எஸ்.ஓ. பைல்களை, பிளாஷ் ட்ரைவில் பதிந்து இயக்க, சில புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஐ.எஸ்.ஓ. பைலைப் பதிய Utility to record Kaspersky Rescue Disk 10 to USB devices என்னும் புரோகிராம் தேவைப்படுகிறது.
இதனைhttp://rescuedisk.kasperskylabs.com/rescuedisk/updatable/rescue2usb.exe என்னும் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். எப் செக்யூர் ஆண்ட்டி வைரஸ் ஐ.எஸ்.ஓ. பைலை, யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்து பெற, Universal USB Installer என்னும் புரோகிராம் தேவைப்படும்.
இதனை http://www.pendrivelinux.com/downloads/UniversalUSBInstaller/UniversalUSBInstaller1.9.0.6.exe என்ற முகவரியில் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.