கிழக்கு மாகாண சபையின் தமிழ் முதலமைச்சர் வாய்ப்பு இத்தடவை தவறவிடப்பட்டுள்ளது. இறுதியாக தேர்தல் முடிவுகளின் பின்னர் மீண்டும் சந்திரகாந்தன் அவர்களையே அரசு நியமிப்பதற்கு முயற்சிசெய்தபோhதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதியினால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. இத்தகைய தமிழ் முதலமைச்சர் வாய்ப்பினை இல்லாது செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவழிகளில் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளதுடன், கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு துரோகத்தையும் செய்துள்ளது. இக்கட்டுரையினூடாக தமிழ் முதலமைச்சராக வரவிருந்த சந்திரகாந்தன் அவர்களது வாய்ப்பை தடுத்து எவ்வாறு முஸ்லிம் தiலைமைத்துவத்திற்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழிசெய்தது என்பது பற்றி ஆராயப்படுகின்றது.
2012 இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சதியை செய்வதற்கு திட்டம் தீட்டியிருந்தது. அந்தவகையில் சம்பந்தன் அவர்கள் அரசகட்சியில் போட்டியிடும் எந்தவொரு தமிழனும் வெல்லக்கூடாது என்பதற்கதாகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம்” என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். எதுவித தேர்தல் விஞ்ஞாபனமும் இல்லாது, மட்டகக்ளப்பு தமிழன் ஒருவன் கிழக்கு மண்ணை ஆளக்கூடாது என்ற வெறும் பழிவாங்கும் கபடத்தனமான நோக்கத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே போட்டியிட்டது. இதேவேளை பிரசாரங்களில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம், வடக்கு கிழக்கை இணைப்போம் போன்ற நிiவேற்ற முடியாத வாக்குதிகளை மக்களுக்கு வழங்கி வாக்குக்கேட்டது. அதனை மக்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இறுதியில் நடந்தது என்ன?
11 ஆசணங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வைத்துக்கொண்டு வெறுமனே எதுவித பிரயோசனமும் அற்றமுறையில் மாகாண சபையில் அமர்ந்திருக்கப்போகின்றது. மாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளத்தினை எடுத்துக்கொண்டிருப்பதற்கேஸ்ரீ தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் இங்கு பயன்படப்போகின்றது. ஆனால் சம்பந்தன் தோற்கடித்த சந்திரகாந்தன் அவர்களை மக்கள் தமது பலத்hல் அதிகூடிய விருப்பு வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அளித்து வெற்றிபெறச் செய்தார்கள். வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒரேயோரு தமிழராகவும், அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அவர் பெற்றது என்பது, அவரது சேவைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இங்கு நோக்கப்படவேண்டும். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரயோசனமற்ற வாக்குறுதிகளின்பால் ஈர்க்கபடாமல் மக்கள் விட்டிருந்தால்; கிழக்கு மாகாணத்திலேயே சுமார் 50000 வாக்குகளுக்கு மேல் பெற்று கிழக்கு மாகாணத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றசாதனைக்கு சொந்தக்காரராக சந்திரகாந்தன் மாறியிருப்பார். அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் களமிறங்கிய பலர் வெற்றிபெற்றிருக்கவும் கூடும். இத்தகைய பலவற்றை தமது சுயநல போக்கால் தட்டிப்பறித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமை, இறுதியில் அரசினால் வழங்கப்ட விருந்த தமிழ் முதல்வர் என்ற வாய்ப்பையும் தட்டிப்பறித்து முஸ்லிம்களின் கைகளில் வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 14 ஆசணங்களைப் பெற்று வெற்றிபெற்றிருந்தபோதிலும், ஆட்சியமைப்பதற்கு 19 ஆசனங்கள் தேவைப்ட்டதனால், ஏதாவது ஒரு கட்சியின் இணைப்புடன் கூட்டாட்சி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நிலைமையில் அரச தரப்பில் குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அவர்களின் இரண்டாவது முதலமைச்சர் தெரிவு என்பது சந்திரகாந்தன் அவர்களாகவே இருந்தது. இதற்கு பின்வரும் காரணங்கள் சார்பாக அமைந்திருந்தது.
• தமிழர்களின் பெரும்பான்மை:-
கிழக்கு மாகாண இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் அதிகமாகவுள்ளனர். இதனால் கிழக்கு மண்ணின் முதல்வராக தமிழ் மகன் ஒருவரே ஆட்சி செய்யவேண்டும். அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்றவர் சந்திரகாந்தன்தான்.
• சந்திரகாந்தன் அவர்களின் ஆழுமை:-
கிழக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்ததுடன், நியாயமான முறையில் அனைத்து பிரதேசங்களையும் ஒரே நோக்கில் வேறுபாடின்றி நோக்கி அபிவிருத்தி செய்தமை. மற்றும் தமது இனம் சார்ந்த மக்களின் உரிமைக்காக பேரம்பேசினாலும், அரசுடன் சேர்ந்து இயங்கி மக்களையும் மாகாணத்தையும் முன்னேற்றியமை.
• மக்களின் அபிமானம்:-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அண்ணளவாக 23000 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அவர் உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சதியினால் தமிழர்களின் வாக்குகள் சிதறாது விட்டிருந்தால் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருப்பார். ஏnனில் மக்களுக்கும் பிரதேசத்திலும் செய்த உதவிகளின் காரணமாக அவர் மக்கள் மனங்களில் நிறைந்த ஒரு தலைவராக இருந்தார். எதிர்த்தரப்பின் வீண்அரசியல் பிரசாங்களே மக்கள் மத்தியில் வாக்குகள் குறைக் காரணமே தவிர உ;ணமையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர் என்றால் அது சந்திரகாந்தன்தான்.
மேற்கூறப்ட்ட சாதகமான நிலைமைகள் சந்திரகாந்தன் அவர்களை அரசதரப்பும், மகிந்தவும் முதல்வராக மீண்டும் நியமிப்பதற்கு சாதகமான காரணங்களாக அமைந்திருந்தது. இந்தவேளையிலே கூட்டாட்சி அமைப்தற்கான முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. அரசதரப்பில் இணைந்து கொள்வதானால் முஸ்லிம் முதலமைச்சு பதவி உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் வழங்கப்படுவதுடன், மத்திய அமைச்சிலும் பதவிகள் வழங்கப்படவேண்டும் என்று ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசதரப்போ மீண்டும் முதல்வராக சந்திரகாந்தன் அவர்களையே நியமிக்கமுடியும், அதற்கான நியாயப்பாட்டையும் தெளிவாக எடுத்து விளக்கியது. இவ்வாறு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும், முதல்வராக சந்திரகாந்தன் அவர்களையே அரசு நியமிக்க விருப்பதையும் அறிந்த தமிழ்தேசியக் கூட்டiமைப்பு, தேர்தலில் தோற்கடிக்க முடியாத சந்திரகாந்தனை இத்தடவை இந்த முதலமைச்சர் தெரிவிலிருந்தாவது கழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டியது.
தனது சதித்திட்டத்திற்கமைவாக “முஸலிம் காங்கிரஸ் தம்முடன் ஆடசியமைப்பதற்கு வருமாறும், முதலமைச்சு பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாகவும், ஏணைய அமைச்சு பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கே வழங்குவதாகவும்” தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடு;த்தார். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைத்திருந்தால் கூட தமிழ் மக்களுக்கு ஒருபிரயோசனமற்ற முடிவை வழங்கியதாகவே அதன் முடிவுகள் அமைந்திருக்கும். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்திடீர் முடிவை எடுத்தது என்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், மீண்டும் சந்திரகாந்தன் அவர்களை முதல்வராக்குவதில் உறுதியாக இரக்கும் அரசதரப்பை முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின்போது, அரசின் முதலமைச்சர் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதேயாகும்.
சம்பந்தன் அவர்கள் விடுத்த அறிக்கையின் காரணமாக முஸ்லிம் காங்கிரசின் பேரம்பேசும் வல்லமை அதிகரித்தது. ஏனென்றால் முஸட்லிம் முதலமைச்சர், ஏணைய அமைச்சு பதவிகள் என்பவற்றையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தருவதற்கு முனையும் போது, முஸ்லிம் காங்கிரசிற்கு “பழம் நழுவி பாலில் விழுந்தது” போன்றதான ஒரு நிலைமை ஏற்பட்டது. இந்த சம்பந்தனின் அறிக்கையை வைத்துக்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசுடகன் பேச்சக்களில் ஏற்பட்டது. “கிழக்கு மாகாண சபையிலே அதிக முஸ்லிம்கள் வெற்றிபெற்றிருக்கும்போதும், அதிக முஸ்லிம்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்கும்போதும், ஒரேயோரு தமிழருக்கு சார்பாக நடந்து கொள்ளமுடியாது . எனவே எமது முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சு பதிவகள் வழங்கினால் தங்களுடன் ஆட்சியமைப்போம் . இல்லாது விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியமைப்போம்” என்று பேரம் பேசினார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள். இ;ந்தவேளையிலே அரசதரப்பு இறுதிவரை சந்திரகாந்தன் அவர்களை முதல்வராக்க நினைத்திருந்தும், கூட்டாட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசின் தேவைப்பாடு இருந்ததனால், ஹக்கீமினுடைய பேரம்பேலுக்காக கொஞ்சம் இறங்கிவந்தது.
அரசதரப்பு சற்று நழுவி முஸ்லிம் காங்கிரசுக்கு முதல் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை வழங்காமல் , தமது கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கும், ஏணைய அமைச்சு பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுப்பதற்கும் முன்வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முன்வந்தது. உண்மையில் அரச தரப்பு ஏணைய அமைச்சு பொறுப்புக்கள யாவற்றையும் முஸ்லிம்களுக்கு வழங்கி விட்டு , முதலமைச்சராக சந்திரகாந்தன் அவர்களை நியமிப்பதில் மிகவும் போராடியது. ஆனால் த.தே.கூட்டமைப்பின் சம்பந்தன் அவாகளின் சதிகார அறிக்கையினால் சந்திரகாந்தன் அவர்கiளை முதலமைச்சராக நியமிக்கமுடியாமல் தோற்றுப்போனது.
கிழக்கு மாகாண சபையில் தமிழ் முதலமைச்சராக வரவிருந்த பிள்ளையான் எனும் தமிழ் தலைமையை வராது தடுத்து முஸ்லிம் இனத்திற்’கு தாரைவார்த்த துரோகத்தனம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே சாரும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ “இந்தநிலைமைக்கு அரச தரப்பில் போட்;டியிட்ட தமிழாகள்தான் பொறுப்பாளிகள்” என்று சிறுபிள்ளைத்தனமாக பதிலளிக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திரகாந்தன் அவர்களை முதல்வராகுவதை தடுப்பதற்கு கங்கணம் கட்டிநின்று வெற்றியடைந்திருந்தாலும், சந்திரகாந்தன் அவர்களுக்கு இன்று மிகவும் கௌரவமான முறையில் கிழக்கு மாகாணத்தின் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.
- ஆராவாணன் -