சீனாவைச் சேர்ந்த திறமைமிக்க விவசாயி ஒருவர், பழைய போர் விமானமொன்றின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இயந்திரமாக மாற்றியுள்ளார்.
சீனாவின், சான்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரை சேர்ந்த பெங் வெங்க் எனும் விவசாயியின் குடும்பத்தினர் ஆறு பேரும் வெந்நீர் குளியலுக்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
மீள்சுழற்சி நிலையமொன்றிலிருந்து மேற்படி எரிபொருள் தாங்கியை அவர் பெற்றுக்கொண்டார். வெள்ளியிலான இந்த எரிபொருள் தாங்கியை சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் தண்ணீர் சூடாக்கியாக வடிவமைக்கலாம் என்ற யோசனையானது அவருக்கு பின்பே வந்துள்ளது.
'இராணுவத்தில் நான் கடமையாற்றிய காலம் முதல் நான் இராணுவ பொருட்கள் மற்றும் விடயங்களில் மீது கொள்ளை பிரியனாகவே உள்ளேன். மீள்சுழற்சி நிலையத்தில் மக்கள் குறிப்பிடத்தக்க பொருட்களை விட்டுச் செல்வதால் எப்போதும் அங்கு மக்கள் காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன்' என வெங் தெரிவித்துள்ளார்.
'நான் இந்த விமானத்தின் பாகத்தை கண்டபோது அதனை நல்ல விடயங்கள் எதற்கேனும் பயன்படுத்த வேண்டுமென நினைத்தேன். நான் எப்போதும் நல்ல பொருட்களை உருவாக்குவேன். நாங்கள் ஒருபோதும் வெந்நீரை பயன்படுத்தியதில்லை. இப்போது எனது குடும்பத்தினருக்கு இந்த வெந்நீரை விநியோகிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த தண்ணீர் சூடாக்கி இயந்திரமானது எனது வீட்டை மேலும் மெருகூட்டி காட்டுவதாக உள்ளது என நான் எண்ணுகிறேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.