9/25/2012

| |

சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்

லியாவ்நிங் என்ற பெயரில், சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல், 25ம் நாள் முற்பகல் சீனக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சீனக் கடற்படை இக்கப்பலின் பல செயற்திறன்களைப் பரிசோதித்து வருகிறது.
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் இச்செய்தி வெளியாகியுள்ளது. விமானம் தாங்கிக் கப்பல் சேர்க்கப்பட்டிருப்பது, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைக் காப்பதிலும், உலகின் அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.