தமிழ் மக்களை நடுக்கடலில் தள்ளிவிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு
வட-கிழக்கு மாகாணத்தினை தாயக பூமி என்று கூறிக்கொண்டு இருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் 41% தமிழர்கள் இருந்தும் ஆட்சியமைக்க முடியாது எதிர் கட்சி ஆசனத்தில் போய் அமர்ந்துகொண்டு ஜனநாயகமற்ற நிலையில் எதிர்கட்சி தலைவர் தெரிவில் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறது.
யதார்த்த ரீதியாகவோ,ஜனநாயக ரீதியாகவோ நடந்துகொண்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட துரைரெட்ணத்திற்கே எதிர்கட்சி தலைவர்
கொடுக்கப்படவேண்டும். கடந்தவருடம் மாகாணசபை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையிலும்,மட்டக்களப்பு மக்கள் 104,000 வாக்குகள் வழங்கியுள்ள நிலையில் மக்களை ஏமாற்றாமல் மட்டக்களப்பிற்கே
எதிர் கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக தண்டாயுதபாணிக்கு வழங்கப்படுமானால் அது ஜனநாயகத்தினை மதிக்காத யாழ் மேலாதிக்க தலைமையாகவே தொடரும் பொறுப்பற்ற செயலாகும்.
என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.