உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியல் குழுவின் தலைவர் வூ பங்குவோ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத்திஸாநாயக்க தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சீனத் தலைவர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதுடன்,சீனத் தலைவருக்கு சபாநாயகர் இராப்போசனவிருந்தினை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்தின் மூலம் இலங்கை வந்தடைந்த சீனத் தலைவர் நேற்று சீனாவின் உதவியுடன் காலியில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுகப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் சுதந்திர சதுக்கம் ஆகிய இடங்களையும் இவர் பார்வையிட்டார்.