செவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் அதி உறைநிலையிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது உறை பனி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உறை பனியானது -125 டிகிரி செல்சியலில் உறைந்துள்ளது.
இவ்வாறு இருந்தால் செவ்வாய் கிரகத்து மேகங்களில் கார்பன் டை ஆக்சைடு கலந்து இருப்பது உறுதியாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
செவ்வாய் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் குளிர்காலத்தில் இத்தகைய பனிப்பொழிவும்,உறைபனியும் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு செவ்வாய் கிரகம் பற்றிய நாசாவின் ஆய்வுகளிலும் இத்தகைய உறைபனி வடபகுதியில் கண்டறியப்பட்டது.
இத்தகைய உச்சகட்ட உறைபனி வெப்பநிலையானது அனேகமாக சூரியக் குடும்பங்களில் செவ்வாய் கிரகத்தில் மட்டும் தான் இருக்கக் கூடும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.