சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் சுபநேரமான முற்பகல் 11.55ற்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் வட மத்திய மாகாண முதலமைச்சராக சமரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நஜீப் ஏ மஜீத் நேற்றைய தினம் முதலமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களுக்கான சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்துகொண்டார்.
மூன்று முதலமைச்சர்களும் உரிய மாகாண ஆளுநர்களிடமிருந்து தத்தமது நியமனம் தொடர்பான பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முதலமைச்சர்களின் சத்தியப் பிரமாணத்தையடுத்து மூன்று மாகாண சபைகளுக்குமான அமைச்சர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். மாகாண சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் நியமனங்களும் வெளியிடப் பட்டன. முதலமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வையொட்டி ஜனாதிபதி செயலகப் பிரதேசம் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டி ருந்தது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச் சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கு உட்பட அமைச்சின் செயலாளர்கள் நேற்றைய தினம் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை :-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சர் பொறுப்புடன் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளை ஜனாதிபதியிடமிருந்து நேற்று கையேற்றார்.
அதனையடுத்து மீரா சாஹீபு உதுமா லெப்பை, அகமட் நkர் செய்னுலாப்தீன், இப்றாஹீம் மொகமட் மொகமட் மன்சூர், விமலவீர திசாநாயக்க ஆகிய நான்கு அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சப்ரகமுவ மாகாண சபை :
சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரான மஹீபால ஹேரத் மீண்டும் முதலமைச்சராக ஜனாதி பதியின் முன்னிலையில் சத்தியப் பிர மாணம் செய்துகொண்டார். அவருடன் சப்ரகமுவ மாகாண சபைக்கு அதுல குமார ராஹுபத்த ஸ்ரீலால் விக்கிரமசிங்க, வி. ஏ.எம். ரஞ்சித் பண்டார, ஏ.கே. பிரபாத் பானு முனிப்ரிய ஆகியோர் அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
வடமத்திய மாகாண சபை :
வட மத்திய மாகாண சபையின் முத லமைச்சராக சமரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அதனையடுத்து வடமத்திய மாகாண சபைக்கு ரத்நாயக்க முதியன்சலாகே புஞ்சிபண்டார ரத்நாயக்க, சுதசிங்க முதி யன்சலாகே பேசந்த ஜயரத்ன, அப்புஹாமி லாகே ஹேரத் பண்டா சேமசிங்க, கிலாலெலகே மஹிதமிகே நந்தசேன ஆகிய நால்வரும் அமைச்சர்களாக சத் தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக் கான சத்தியப் பிரமாணத்தையடுத்து மூன்று மாகாண சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இப் பெயர்களை அறிவித்தார். றேம்படி மூன்று மாகாண சபைகளிலும் அரசாங்கத் துடன் இணைந்து போட்டியிட்ட ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்கள் பதவி வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கிணங்க கிழக்கு மாகாண சபை தவிசாளராக ஆரியவதி கலப்பத்தியும், உபதவிசாளராக அப்துல் சரீப் சுபைரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாண சபையின் தவிசாள ராக அமரகீர்த்தி அதுகோரலவும் உப தவிசாளராக தென்னக்கோன் முதியன்சலாகே யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளராக காஞ்சன ஜயரத்னவும், உப தவிசாளராக துஷ்மந்த மித்ரபாலவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
நேற்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட முதலமைச்சர்கள், அமைச் சர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
அதனையடுத்து ஜனாதிபதி செயலக முன்றலில் ஜனாதிபதி யுடன் முதலமைச்சர் கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது.