கருத்து வேறுபாடுகளை களைந்து கிழக்கை கட்டியெழுப்புவதே இன்றைய அவசர தேவை
ஒத்துழைப்பு வழங்குமாறு நஜPப் ஏ. மஜPத் பகிரங்க அழைப்பு
கேள்வி: முதலமைச்சர் பதவி கிடைக்குமென நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களா?
பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே. எனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமென நான் ஒருபோதும் எண்ணியதில்லை. எனினும் எனது கடந்தகால அரசியல் பணி களங்கமற்றது. இலஞ்சம், மோசடி, எதிர்பார்ப்புகள் எதுவுமற்றது. இறைவனுக்குப் பொருத்தமாக நேர்மையை கடைப்பிடித்து அரசியல் பணி செய்தேன். இனம், மதம் என்ற பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரையும் சமமாகவும் சகோதரர்களாகவும் கருதி அரசியல் பணியில் ஈடுபட்டேன். அதன் பிரதியுபகாரமே இந்தப் பதவி என்று நான் கருதுகின்றேன்.
பதில்: அரசியலிலே விமர்சனத்தக்குட்படாத வகையில் கடந்த காலத்தில் பணிபுரிந்தேன். அத்துடன் என்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவராக ஜனாதிபதி இருந்தார். அவர் மட்டுமல்ல குறிப்பிடத்தக்க உயர்மட்ட அமைச்சர்கள் கூட என்மீது அன்பும் ஆதரவும் காட்டி வந்தனர். அமைச்சர் பதவியொன்று கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.
கேள்வி: கிழக்கு மாகாண சபையில் மூவின மக்களும் ஏறத்தாழ சம அளவில் வாழ்கின்றனர். அதனால் உங்களுடைய பணி எவ்வாறு அமையுமெனக் கூறுவீர்களா?
பதில்: நீங்கள் கூறியது போல் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட பல சிறப்பம்சங்கள் கொண்டது. கிழக்கிலே மூவின மக்களும் சமமாக வாழ்வதால் மூவின மக்களின் பிரதிநிதித்துவமும் சபையில் உள்ளது. மூவின மக்கள் பிரதிநிதிகளின் பொதுவான நோக்கு இம்மாகாணத்தின் அபிவிருத்தியும் மக்களினது சுபிட்சமுமே. அந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி மாகாணங்களிலுள்ள அனைத்து பிரதிநிதிகளினதும் வேண்டு கோள்களுக்கு மதிப்பளித்து முரண்பாடற்ற ஒரு நிர்வாகப் பொறிமுறையை முன்னெடுத்துச் செல்ல விரும்பியுள்ளேன். தேர்தல் காலத்திலே ஆளை ஆள் தாக்கியும் கட்சிகளைக் கட்சி தாக்கியும் மேடைகளில் பேசுவது வழக்கம் தான். தேர்தல் முடிந்த பின்னர் அவ்வாறான பேச்சுக்களும் கருத்து முரண்பாடுகளும் காற்றோடு காற்றாய் மறைய வேண்டியவை. இங்கு வாழும் மூவின மக்களும் கிழக்கு வாழ் மக்கள். அவர்களது பிரதிநிதிகளும் கிழக்கு வாழ் அரசியல்வாதிகளே. இனி கட்சிபேதம் அவசியம் இல்லை. கருத்து முரண்பாடுகள் தேவை இல்லை.
அனைவரும் ஒன்றிணைந்து மஹிந்த அரசின் உயர் சிந்தனைக்கு மதிப்பளித்து கிழக்கை முன் னேற்றுவதற்கு முன்வர வேண்டுமென பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன். மக்கள் நலனே நமது பணி. மக்கள் சுபிட்சமே நமது கடமை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
கேள்வி: மாகாண அரசாங்கத்தை அமைப்பதற்கு மு.கா உதவி வழங்கியுள்ளது. அது பற்றி நீங்கள் கூற விழைவதென்ன?
அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடங்கிய எனது நியமனத்தை பரிசீலனை செய்த உயர்மட்ட அமைச்சர்கள், அமைச்சர்களான ஹக்கீம், அதாவுல்லா, றிசாத் ஆகியோருக்கும் என் நன்றிகள் உரித்து.
இது தவிர இம்மாகாண சபையில் நான் இடம்பெற உள்ளன்போடு எனக்கு வாக்களித்த திருமலை மாவட்ட மக்ககள், தேர் தல் பிரசாரத்தில் எனக்கு உதவிய அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள், முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென உள்ளன்போடு பாடு பட்டவர்களுக்கும் நான் நன்றியு டையவன்.
கேள்வி: உங்கள் மாகாண அமைச்சரவையில் தமிழ் மகன் ஒருவர் இடம்பெறவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே?
பதில்: தமிழ் மகன் இடம்பெறும் சூழ்நிலை இருந்தது. பின்னர் அது வேறு விதமாக மாறிவிட்டது. தமிழ் மகனும் அதில் இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள் ளேன்.
கேள்வி: மாகாண நிர்வாகத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் கிடைக்கும் எனக் கருதுகின்aர்களா?
பதில்: அரசியல் கொள்கைகள் வேறு. அபிவிருத்தி வேறு. மாகாண அரசின் நோக்கம் பிரதேசங்களின் அபிவிருத்தி. மாகாணத்தின் அபிவிருத்தி அந்த வகை யில் கிழக்கு மாகாணசபை முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ்க் கூட்ட மைப்பின் ஒத்துழைப்புக் கிடைக்குமென நம்புகின்றேன். அபிவிருத்திப் பணிகளில் அவர்களது நியாயமான கோரிக் கைகளை மாகாண சபை நிறை வேற்றும்.
கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து நிர்வாகத்துக்கு ஒத்து ழைக்குமாறு அன்புடன் கோரு கின்றேன்.
கேள்வி: முதலமைச்சரை பொதுமக்கள் சந்திப்பது கஷ்டமாக இருப்பதாகக் கூறப்படுகின்றதே?
கேள்வி: கிழக்கு மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரம் தேவையென்ற கோரிக்கைகள் அடிக்கடி எழுப்படுகின்றனவே. புதிய முதலமைச்சராகப் பதவி பெற்றுள்ள நீங்கள் இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்aர்கள்?
பதில்: இந்த இரண்டு விடயங் கள் குறித்தும் மத்திய அரசுடன் பேசித் தீர்க்க முடியும். காணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. பொலிஸ் அதி காரம் தொடர் பில் பேசித் தீர் க்க வேண்டும்.