இலங்கையின் மிகப் பிரபலமான, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வாரப் பத்திரிகையான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.2009-இலிருந்து அதன் ஆசிரியராக இருந்து வந்திருக்கும் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் தான் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து வெளிப்படையாகவே பேசுகிறார்.
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஒருவர் இந்தப் பத்திரிகையின் பங்குகளில் 72 சதவீதத்தை வாங்கிய பின்னர், ராகபக்ஷ தரப்பினரை விமர்சிக்கும் கட்டுரைகளையோ அல்லது செய்திகளையோ வெளியிடுவதை நிறுத்துமாறு தனக்கு உத்தரவிட்டதாக
ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் கூறுகிறார்
.
.