கிழக்கு மாகாணசபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
திருகோணமலை நகரில் உள்துறைமுக வீதியிலுள்ள முந்தைய பிரதம செயலகக் கட்டடத்தில் தனது செயலகத்தை முதலமைச்சர் அமைத்துள்ளார்.
கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் செயலகம் வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலகத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்துதான் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தனது கடமைகளை செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்; வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகம் முதலில் வரோதய நகரில் இயங்கிவந்தது. கிழக்கு மாகாணசபையின் செயலகம் திருகோணமலை நகரில் உள்துறைமுக வீதியில் இயங்கிவந்தது.
வடக்கு மாகாணசபையின் செயலகம் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் வரோதய நகரில் இருக்கும் பிரதம செயலகக் கட்டட வளாகம் கிழக்கு மாகாணசபைக்கு கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருகோணமலை நகரிலிருந்து இயங்கி வந்த கிழக்கு மாகாணசபையின் அமைச்சுக்கள் மற்றும் முதலமைச்சரின் செயலகம் அனைத்தும் வரோதய நகரிலுள்ள செயலகக் கட்டங்களுக்கு மாற்றப்பட்டன.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட முதலமைச்சர், பொதுமக்களின் போக்குவரத்து வசதி கருதி தனது முதலமைச்சு செயலகத்தை மீண்டும் பழைய இடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.