கிழக்கு சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுப் பகுதிக்குள் 6 சீன உளவு கப்பல்கள் சென்றுள்ளதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் உள்ளது தியாவ்யூ தீவு. இத்தீவில் இயற்கை எரிவாயு வளம் அதிகம் இருப்பதால் சீனாவும்,ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இருப்பினும் இத்தீவு தனியார் ஒருவருக்கு சொந்தமானது. இதனால் ஜப்பான் அண்மையில் இந்த தீவை விலை கொடுத்து வாங்கி தமது நாட்டோடு இணைத்துக் கொண்டது.
ஆனால் சீனாவோ,தியாவ்யூ தீவுப் பகுதி தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும் சீனா நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருவதுடன்,தியாவ்யூ தீவுப் பகுதிக்கு 6 உளவு கப்பல்களையும் அனுப்பியிருந்தன. இந்தக் கப்பல்கள் நேற்று தியாவ்யூ தீவுப் பகுதியில் நுழைந்திருக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நேற்று ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் சீனா முறையிட்டிருந்தது.
ஜப்பான் நாட்டு கப்பல்களும்,சீனாவின் கப்பல்களும் தியாவ்யூ தீவுப் பகுதியில் நின்று கொண்டு இருதரப்பினரும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் தியாவ்யூ தீவுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது