ஐ.நா எய்ட்ஸ் நோய் திட்ட ஆணையம் செப்டம்பர் 24ம் நாள், இந்தியாவின் புகழ் பெற்ற நாடிகை ஐஸ்வார்யா ராயை அவ்வமைப்பின் புதிய உலக நல்லெண்ணத் தூதராக நியாமித்தது. எய்ட்ஸ் நோயின் தாய்-குழந்தை பரவலைத் தடுத்து, குழந்தையின் நோய் தொற்று விபத்தைக் குறைப்பது அவரது பணியின் நோக்கமாகும். இதன் மூலம், 2015ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோய்க் கிருமியிலிருந்து புதிய தலைமுறையைப் பாதுகாப்பதென்ற ஐ.நாவின் இலக்கை நனவாக்க அவர் பாடுபடுவார்.
இப்பதவியைப் பெற்றிருப்பது குறித்து ஐஸ்வார்யா ராய் பெருமையைத் தெரிவித்தார். அதேவேளை, அவர் தனது முக்கியமான பொறுப்பையும் உணர்ந்தார். தனது செல்வாக்கு மூலம் பொது மக்களை எய்ட்ஸ் நோய் மீதான உணர்வை மேலும் அறியச் செய்ய இருப்பதாக அவர் கூறினார்.