9/15/2012

| |

.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்தர்

 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கூட்டமைப்பில் வெற்றிபெற்றுள்ள தமது உறுப்பினர்கள் எங்கே அரசாங்கத்தோடு சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் எல்லோரையும் திருகோணமலைக்கு வரவழைத்து சம்பந்தன் ஒரு வீட்டிலே வைத்துப் பூட்டிவைத்துள்ளார். என்ற செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் எனினும் அங்கிருந்து இரு உறுப்பினர்கள் அரசின் பக்கம் கம்பி நீட்டி விட்டார்கள் என அறிய முடிகிறது .அதில் ஒருவர் டெலோ ஜனா  மற்றயது கூட்டணி   வெள்ளி மலை  என அறிய முடிகிறது.
 
மறுபுறம் முஸ்லிம் காங்கிரசும் அரசனை நம்பி புருஷனை கைவிடுவதா? புருஷனை
நம்பிஅரசனை கைவிடுவதா ?என்று காலத்தை கடத்திகொண்டிருக்க அங்கிருந்து இரு உறுப்பினர்களை வென்றெடுப்பதில் அரசு தனது விவேகத்தை காட்டிவிட்டது எனவும் அறிய முடிகிறது. வெள்ளி இரவு கூட்டமைபுடன் பேச வருகிறேன்என்ற  க்கீம் வராமலேயே போய் விட்டார். இலவு காத்த கிளியாக சம்பந்தர் பாவம் இருந்த பிள்ளையானையும் பலவீனமாக்கி வைக்கோல் பட்டரை நாயாக நிற்கிறார்