எந்த ஒரு யாழ்ப்பாண தலைமைகளின் ஒப்புதல்களுமின்றி பிள்ளையான் தனித்து நின்று உருவாக்கிய மாகாண சபைக்கு இவ்வளவு மவுசு வந்திருக்கின்றது என்றால் அது பிள்ளையான் வகுத்த வழிதான்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதிலளித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக விடுத்துவரும் அழைப்புக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.மாகாணசபைத் தேர்தல் நடந்து ஒரு வாரமாகியும் இன்னும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறிவருகின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று மாலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் முஸ்லிம் காங்கிரஸ் தம்மை காக்கவைத்து பதில்கூறாமலேயே விட்டுவிட்டதாக தமிழ்க்கூட்டமைப்பு தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்
ஒன்றும் இல்லாத மாகாண சபை உதவாக்கரை மாகாணசபை பொம்மை முதலமைச்சர் என்றெல்லாம் வக்கணம் பேசிய புலிப்பினாமிகளும் புலிக் கூட்டமைப்பினரும் இன்று கிழக்குமாகாண சபைக்கு அரசாங்க அந்தஸ்து கொடுத்து அதை கைப்பற்ற இரவு பகலாக ஓடித்திரிகின்றார்கள். எந்த ஒரு யாழ்ப்பாண தலைமைகளின் ஒப்புதல்களுமின்றி பிள்ளையான் தனித்து நின்று உருவாக்கிய மாகாண சபைக்கு இவ்வளவு மவுசு வந்திருக்கின்றது என்றால் அது பிள்ளையான் வகுத்த வழிதான்.
கிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூட தெரியாத அப்புகாத்துக்கள். ஒற்றையாட்சி முறைமைக்குள் ஒரு அரசும் ஒரு அரசாங்கமும்தான் இருக்கும்.அதுவே மாநில,சமஷ்டி முறைமையானால் ஒரு அரசாங்கமும் பல அரசுகளும் இருக்க முடியும். ஆனால் ஒருபோதும்ஒரு நாட்டில் பல அரசாங்கம் இருக்க முடியாது. ஏதோ தாங்கள் கால் வைத்தால் ஏதோ பெரிய காரியமாக மக்களுக்கு காட்டுகின்ற வேகத்தில் சம்பந்தர் தேசிய அரசாங்கம் என்ற வார்த்தையை பாவிக்க. ஊடகங்களுக்கும் தமிழ் தேசிய வெறியில் கண் மண் தெரியவில்லை. அரசோடு சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போகிறார்களாம் கூட்டமைப்பினர். பிள்ளையான் அரசோடு இருந்தால் துரோகி. கூட்டமைப்பு அரசோடு சேர்ந்தால் அதை என்ன சொல்வது புகலிட தம்லர்க்ளுக்கே வெளிச்சம்.