தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியும், ஆளும் ஐ.ம.சு.முன்னணியும் ஒன்றுதான் என்றால் யாழ். நூலகத்தை எரித்து 1983 ஜுலைக் கலவரத்திற்குக் காரணமான ஐ.தே.கட்சியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க முடியுமாயின் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவகை செய்து அபிவிருத்தி என்றால் என்ன என்று தமிழருக்கு யதார்த்தமாகக் கூறிய ஐ.ம.சு.முன்னணியுடன் ஏன் கூட்டுச் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைக்க முடியாது?
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் முன் னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளரும், ஐ.ம.சு.முன்னணியின் முன் னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பின ருமான சோமசுந்தரம் புஸ்பராசா கேள்வி யெழுப்பியுள்ளார்.
பல்லாண்டு காலமாக துன்பத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு இது ஓர் நிவாரணமாக அமையாதா? கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு அடுத்தபடியாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகா ணத்தை பிறருக்கு தாரைவார்க்க முற்படுகிறதா?
நான் இனவாதம் பேசவில்லை. கிழக்கில் பெரும்பான்மையினமாக உள்ள தமிழ் மக்கள் கிழக்கை ஆள்வதில் என்ன தவறு இருக்கிறது? அதற்காகத்தான் தமிழ் மக்கள் முன்னரைவிட கூடுதலானளவு வாக்களித்துள்ளனர். மு.காவுடன் சேர்ந்து தமிழ் ஆட்சியைத் தாரை வார்ப்பதற்காக அல்ல. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தெரிவுக்குழு வில் பேச வருமாறு அழைத்தால் செல்வதில்லை.
சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்று பசப்புவார்த்தைகளைக் கூறிக்கூறி எதிர்க்கட்சி அரசியல் செய்து தமது இருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாகும்.
30 வருடங்களாக மாண்டு மடிந்து இன்னமும் அல்லல்படும் அந்த தமிழ்மக்க ளுக்கு ஒரு தற்காலிக இடைக்கால விடிவையாவது ஏற்படுத்த அவர்கள் எண்ணவில்லை. மக்களை வைத்து அரசியல் செய்யும் நீங்கள் அந்த மக்களின் தேவைகளை முதலில் நிறைவு செய்ய வேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சி அரசியல் செய்து கண்ட பலன் என்ன? பிரபாக ரனையே காப்பாற்றாத சர்வதேசமா சாதாரண தமிழ் மக்களுக்கு தீர்வு தருவது? நடக்கக்கூடிய ஒன்றா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.