9/20/2012

| |

பிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அகதிகளாக பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்தவர்களில் சுமார் 60 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் இலங்கையை வந்தடைவர் என்று பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 
தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் குழுவில் அடங்குவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. 
இலங்கையில் தற்போது அச்சுறுத்தல் இல்லை எனவும் அதனால் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையில் இலங்கையில் நிலவுவதால் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.