9/17/2012

| |

நெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது

சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக 2000 மில்லியன் ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கே.பீ. ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

15 மாவட்டங்களில் 30 நிலையங்களில் இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்படும். ஏற்கனவே 10000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

அரசின் கொள்வனவு வேலைத்திட்டத்தால் நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரு கிலோ நெல் 32 ரூபா வரை விலை அதிகரித்துள்ளதாகவும் தலைவர் கூறினார்.

கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா ஆகிய பகுதிகளிலும்,கிழக்கில் திருகோணமலையிலும் நெல் கொள்வனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.