9/16/2012

| |

20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வசந்தம்

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஜீவா,சமந்தா,சந்தானம் நடிக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம்.
இப்படத்தை திரு. எல்ரெட் குமார்,ஜெயராமன் இருவரும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி நடைபெற்றது. இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் வெளியிட,நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.
இப்படத்தின் இசை கோர்வை செய்த லண்டன் ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்கள் 60 பேர் சென்னையில் தமிழ்த் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களின் முன்னிலையில் நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வாசித்தது அனைத்து இசை ரசிகர்களையும் இன்பத்தில் ஆழ்த்தியது.
வெளிநாட்டு இசை கலைஞர்கள் சென்னையில் தமிழ் பாடல்களுக்கு இசை மீட்டியது இதுவே முதல்முறை என்பது நமக்கு பெருமை.
இசைஞானியின் ராஜ்யம்
இசை தட்டுகள் அனைத்தும் பாடல் வெளியான அன்றே விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இசை ரசிகர்கள் இசைஞானிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.
இப்படத்தின் டிரெய்லர் யூரியூப்பில் வெளியான ஒரே வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்து தமிழ் சினிமாவின் இணையதள வரலாற்று சாதனையில் இப்படத்திற்கு முதன்மை அளித்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார்,ஜெயராமன் மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் முழுக்க இசைஞானியின் இசை ரசிகர்களால் கிடைத்த பெருமையே என கருதுகின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் தற்போது தமிழ்நாட்டின் நகரம் முதல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இசைஞானி தனது இசை ராஜ்ஜியத்தை இங்கு நடத்தி வருகிறார்.
இதன் மூலம் இசைஞானி காலங்களை கடந்தவர் என்பது நிரூபணமாகி உள்ளது.