யானையொன்றினால் வரையப்பட்ட ஓவியமானது 1,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகியுள்ளது. இந்த ஓவியத்தின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கலாமென நம்பப்படுகின்றது.
பெருகு மிருகக் காட்சிசாலையில் கலையார்வத்துடன் காணப்படும் 'சான்டி' என்று அழைக்கப்படும் யானையே இவ்வாறு ஓவியங்களை கீறும் பழக்கமுடையதாக காணப்படுகின்றது.
ஆசிய இனத்தை சேர்ந்த மேற்படி யானைக்கு அதனது பாகனான வெரோனிகா ஸ்டூர்ப்லோ இவ்வாறு ஓவியம் வரையும் கலையை கற்றுக்கொடுத்துள்ளார்.
இவ் யானையால் வரையப்பட்ட மேலும் 12 ஓவியங்கள் சேகரிக்கமுடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் யானையின் ஓவியங்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதுடன் இதுவரை 4,000 ஸ்ரேலிங் பவுண்கள் ஏலத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பணமானது இலங்கையில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுமனெ தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்ண தூரிகைகளை எவ்வாறு பிடிக்க வேண்டும் போன்ற ஓவியம் சார்ந்த பல்வேறு கற்றல்களை வெரோனிகா ஸ்டரப்லோவ் மேற்படி யானைக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
முதலில் தனது யானை பாகனின் உதவியுடன் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஓவியங்களை வரையத் தொடங்கிய சான்டி பின் தனது மேற்பார்வையாளரின் உதவியின்றி வரையத் தொடங்கியது.
'வர்ணம் தீட்டுதல் என்பது பகுதியான செறிவூட்டல் நிகழ்வாகும். இந்த செயற்பாடு எமது விலங்குகளை மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது' என பிரெகு மிருகக் காட்சி சாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.