9/30/2012

| |

60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்கிலே தனிமனிதனாக 22000 வாக்குகளைப்பெற்று ஈட்டிய வெற்றியை நாம் சும்மா மதிப்பிடமுடியாது.

Katsura Bourassaஇடைமறிப்பு. எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களுடன் நான்-கற்சுறா


"60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்கிலே தனிமனிதனாக 22000 வாக்குகளைப்பெற்று ஈட்டிய வெற்றியை நாம் சும்மா மதிப்பிடமுடியாது."

எஸ்.எம்.எம்.பஷீர்  அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார். இலங்கை அரசியலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதிவருபவர்.
பஷீர் அவர்களின் இணையத்தள முகவரி  : http://www.bazeerlanka.com/

இரண்டுகேள்வியில் ஒன்றும் அதன் பதிலும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்.



கற்சுறா: தற்போது நிகழ்ந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்  கிழக்கில் முதல்ஆட்சியமைத்த தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியை அமைக்க முடியாமல் போய்விட்டது. கடந்த தேர்தலைப் புறிக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை வெட்கமற்றுப் போட்டியிட்டாலும் அதுவும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஆழும் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவரே முதலமைச்சராகியுள்ளார். இந்த நிலையில் தமிழ் மானம் போய்விட்டதாகவே கருதும் தமிழ்தேசியவாதிகள் கிழக்கின் கதை இனி முடிந்தது என்றே கவலை கொள்கிறார்கள். இனிவரும் காலங்களில்  கிழக்கின் எதிர்காலம் எப்படியிருக்கும்?


பஷீர்: இந்தத்தேர்தலை விட கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என்பதனால் அந்தப் பாரிய இடைவெளியை நிரப்பவே, அதாவது தமிழர் தரப்புக்குரிய வாக்கு என்ற வகையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குக் அதிகப்படியான வாக்கு அப்போது கிடைத்தது. 

இந்த முறை தமிழர்கூட்டமைப்புப் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றதன் மூலம் அது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அரசியலைப் பன்முகப்படுத்தவில்லை. அவர்களது கட்சியின் பெயர் கூட புலிகள் என்பதின் தொடர்ச்சி எனத் தக்கவைத்துக் கொண்டிருப்பதனால் மக்களிடத்தில் ஒரு மாயையைத் தோற்றுவித்துக் கொள்வது என்பதை தமக்கு சாதகம் என்று அவர்கள் நம்பினார்கள். மக்கள் தம்மைப் புலிகளின் ஒருபகுதியினர் என எண்ணிக் கொள்வார்கள் எனவும் அது தமக்குச் சாதகமாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பினார்கள். அது ஒரு பிழையான அணுகுமுறை என நான் எண்ணுகிறேன்.

இன்னொரு புறம் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் உள் முரண்பாடுகளின் வடிவமாக தங்களைக் காட்டிக் கொள்ள முற்பட்டார்கள். அது கருணாவுக்கூடாகத் தான் நடைபெற்றது. ஆனாலும் கருணாவுக்கும் சந்திரகாந்தனுக்கும்  ஏற்பட்ட உள்முரண்பாடு வடக்குத் தலமைக்கு எதிராக வடக்குத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான போராட்டத்தை நலிவடையச் செய்தது. அதுமட்டுமல்லாமல் அந்த இருவரது உள்முரண்பாடுகள் இன்றுவரை தொடர்கதையாகவே இருக்கின்றன. இந்த உள்முரண்பாடுகளே அந்தக் கட்சியை மிகப்பலவினப்படுத்தியது.

 கருணாவின் தலைமயிலான அந்தக் கட்சி உள்முரண்பாடுகளற்று இருந்து இருக்குமானால் அதன் விளைவு வேறுமாதிரி இரந்திருக்கும். அவர்கள் சேர்ந்தியங்கியிருந்தால் அதன் பாதிப்பு - தாக்கம் என்பது வேறுமாதிரியானதாகவே இருந்திருக்கும். அந்த உள்முரண்பாட்டால் கட்சி நலிவடைந்து போனதையும் அதன் விளைவையும்  நாம் இப்போது தேர்தல் வடிவில் பார்க்கிறோம்.

தேசிய அரசியலுக்குள் தமிழ் மக்களைக் கொண்டு போவது என்பது இலகுவான காரியமல்ல. ஏனென்றால் கடந்த 60 வருடகாலப் போராட்டத்திலே ஆட்சியமைத்த ஐக்கியதேசியக் கட்சியாகட்டும் சிறீலங்கா சதந்திரக் கட்சியாகட்டும் அவற்றை தமிழ்க் கட்சிகள் ஆதரித்தால் மாத்திரமே மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பு நிலையும் இருக்கும். மற்றப்படி தனித்துவமாக மக்கள் ஆதரித்த வரலாறு இல்லை. களநிலை இல்லை. அந்த வகையிலே கருணா அவர்கள் தேசியக் கட்சியான சுதந்திரக்கட்சியில் இணைந்ததின் மூலம் தனது அரசியல் அபிலாசைகளை அடைந்திருக்கிறார் என்பதும், அதனூடாக மக்களை தேசிய அரசியலுக்குள் உள்வாங்கிக் கொள்ளலாம் என்ற அவரது எதிர்பார்ப்பு என்பதும் பாரியளவு வெற்றியைத் தந்திருக்கிறதா என்று கேட்பதன் மூலம் தனித்துவமாகவே வடக்கிலிருந்து பிரிந்து கிழக்கு மக்களுக்கான கட்சியாக ஸ்தாபித்து கிழக்கு அரசியலை முன்னெடுத்த சந்திரகாந்தன் வெற்றியளித்திருக்கிறாரா என்பதையும் இந்தத் தேர்தலுக்கூடாக நாம் பார்க்கவேண்டும்.

 சந்திரகாந்தனுடைய தலைமைத்துவத்திற்கு அப்பால் கட்சியினுடைய மொத்தச் செயற்பாடும் அதாவது கிழக்குத் தழுவிய அரசியற் செயற்பாட்டில் அவர்களது அரசியல் ஆழுமை என்பதில் பலவீனமாகவே இருந்திருக்கிறார்கள்.

அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் வழக்கம் போலவே சமூகத்தின் பிரபலங்களை சமூகசேவகர்களை முன்னாள் ஆசிரியர்களை கல்விமான்கள் போன்றோரைக் கொண்டே தமது அரசியலை முன்னெடுத்தவருகிறார்கள்.அதனூடாகவே அவர்கள் பலவெற்றிகளைப் பெறக்கூடியதாக இருந்திருக்கிறது.

அந்த சமூக ஆழுமை மிக்க பிரதிநிதிகளைப் பெறுவதிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தவறி விட்டார்கள். அவர்களைப் பொறுத்தளவிலே சந்திரகாந்தன் என்ற தனிமனிதனைச் சார்ந்ததாகவே அவர்கள் பலம் இருந்திருக்கிறது என்பனை இந்தத் தேர்தல் புலப்படுத்தியிருக்கிறது. மற்றய அங்கத்தவர்களைப் பொறுத்தளவில் மற்றய மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் போட்டிபோடக்கூடிய தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை என்பதையும் இந்தத் தேர்தல் பலப்படுத்தியிருக்கிறது.

ஆகவே திட்டமிட்டவகையில் கட்சியின் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப் பாடாமையும் தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் அந்த அரசியல் அனுபவங்களிலேயே அவர்கள் கற்றுக்குட்டிகளாக காணப்பட்டமையும் இந்தத் தோதலின் தோல்விக்கான காரணமாகப்பார்க்கப்படவேண்டும் .தனிப்பட்டவகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திரகாந்தன் 22000 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றிருக்க முடியும் என்றால். அவருடைய ஆளுமை இங்கு புலப்படுகிறது. ஒருதனிமனிதனாக 60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்கிலே தனிமனிதனாக ஈட்டிய வெற்றியை நாம் சும்மா மதிப்பிடமுடியாது.

வடகிழக்கு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் சொல்லிவந்த தமிழத்தேசியக் கூட்டமைப்பு முதலாவது கிழக்குமாகணத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டு இன்று 5 ஆண்டுகால இடைவெளிக்குப்பின்  கிழக்கு மாகாணத்திற்கு அங்கீகாரம் வழங்குமாப்போல் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களின் நீண்டகால அரசியற்கோட்பாட்டை முன்நிறுத்தி, தமது அரசியல் பலம் ஆழுமை பலம் அரசியல் கருத்துப்பலம் என்பவற்றை முன்நிறுத்தித் தோதலில் நின்றாலும் அதற்கெதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 22000 பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பது மிகமுக்கியமான விடையம்.

அதுவும் அவர்களைப் பொறுத்தளவில் சிங்களப் பேரினவாத அரசுடன் நின்று கொண்டு  ஒரு துரோகியாக ஒரு காட்டிக் கொடுப்பாளனாக தமிழ்த் தேசிய விரோதியாகக் காட்டப்பட்ட  ஒருவருக்கு 22000 வாக்குகளை அதுவும் அதிகப்படியான வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள் என்பதும் தமிழத் தேசியத்துக்கெதிராக தமது கிழக்கின் மகனாக மக்கள் அங்கீகரித்து அவரை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்தளவில் சந்திரகாந்தன் தனிமனிதனாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவனாகவும் இருந்து கிழக்கில் மகிப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இந்தத் தனிமனித வெற்றி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமையின் வெற்றி என்பது எப்படி எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மூலதனமாக்கப்படப்போகின்றது என்பது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். தொடர்ந்தும் கட்டுக் கோப்பற்ற அரசியல் கட்டுமானமற்ற கட்சியாக தமது கட்சியைத் தொடர்ந்து பேணுவார்களாக இருந்தால் மீளவும் தனிமனித வெற்றிகளாகவே இருக்குமேயொழிய கிழக்குமக்களின் கட்சியாக முதல் பதிவுசெய்யப்பட்ட கிழக்குமாகாணக் காட்சியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தளவில்  இம்முறை போட்டியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சமூக முக்கியஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்தகாலத்தில் தமிழத்தேசியவாதத்தினையே ஊட்டி வளர்ந்தவர்கள். என்னைப்பொறுத்தளவில் அவர்கள் பாரிய வெற்றியை ஈட்டவில்லை என்றே சொல்வேன். அரசு சார்பாகக் கேட்ட கணிசமான வேட்பாளர்கள் தோல்வியுற்றாலும் பாரியளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

அந்தவகையில்  தமிழத்தேசியக் கூட்டமைப்பின் மாயையை -அதாவது கூட்டமைப்பினர் பெருமளவு வெற்றியீட்டியிருக்கிறார்கள் தமிழ்மக்கள் முழுப்பேரும் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் கிழக்கு மக்களில் தாம் செல்வாக்குச் செலுத்தகிறார்கள் என்ற பொய் விம்பத்தை அது தகர்த்திருக்கிறது. மறுபுறம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று அவர்கள் வெறுமனே பேசுகிற  சுலோகக்கோட்பாடு கூட தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஏனென்றால் இவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வராமல் முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது என்பதும் இவர்களுக்கிடையில் உண்மையான இணக்கப்பாடோ  ஒருங்கிணைவோ ஒருபோதும் இருக்கவில்லை. அவை வெறுமனே கோசங்களாகவே இருந்தன என்பதையுமே தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. அதன் பின் வந்த கூட்டுக்களும் காட்டியிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைப் பொறுத்தளவில் அவர்களுடைய கட்சி தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் கட்சியாகவே செயற்பட்டது. அவர்களால்  தமது வேட்பாளர்களில் முஸ்லீம்களையோ சிங்களவர்களையோ ஒருவரைத்தன்னும் உள்வாங்கியிருக்கவேண்டும். தமழ்க்கூட்டமைப்பு ஓரிரு முஸ்லீம் வேட்பாளர்களைக் கொண்டுவந்த அளவுக்குக்கூட இவர்கள்; ஒரு முஸ்லீமைக் கூடக்கொண்டுவரவில்லை. பல்தேசிய இனத்தின் முழுச் சமூகங்களின் கட்சியாக அது தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் வெறுமனே தமிழர்களின் கட்சியாகவே அது தேர்தலில் போட்டியிட்டது மிகப்பலவீனமான விடையமாகும்.

ஆனால் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசோ வெறுமனே முஸ்லீம் மக்களுக்கான கட்சியாக இருந்தாலும்  அப்பாவிச் சிங்களமக்களை உள்வாங்கி அவர்களைச் சிங்களப் பிரதேசங்களில் போட்டியிடச்செய்தது. ஒரு Nசிய, இனவாத, மதவாதக் கட்சியினால் சிங்களமக்களையும் உள்வாங்கிக் கொண்டு தோதலில் போட்டியிட முடியுமென்றால் ஏன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளினால் இயலாமல்போனது என்ற கேள்வி எழுகின்றது.  வெறுமனே புலிகள் சார்ந்த கட்சியாக இருந்ததுதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என எண்ணத்தோன்றுகிறது.

அடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முஸ்லீம் முதலமைச்சரைத் தாமே முன்வந்து வழங்குவதாகச் சொன்னார்கள். அவ்வாறு வழங்குவதூடாக அரச எதிர்ப்பு, சிங்களப்பேரினவாதம்,சுயாட்சி, தன்னாட்சி, அல்லது வடக்குக்கிழக்கு இணைப்பு என்ற தங்களது பல்வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை தங்களது அரசியல் செயற்திட்டங்களை தங்களுக்கூடாகவே  செயற்படுத்தவதற்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சரை தாம் நிமிக்கத் தயாராய் இருப்பதாகச் சொன்னார்கள்.  அந்தக் கனவில் பாரிய இடி விழுந்திருக்கிறது.

முஸ்லீம்களைப் பொறுத்தளவில் அவர்கள் எந்தக்கட்சியும் சாராது தனித்துவமாகப் போட்டியிட்டால், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டாலும் கூட முஸ்லீம் முதலமைச்சர் ஒருவர் வருவதற்கான சாத்தியப்பாடுகளே அங்கு உண்டு. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் மற்றய இனங்களது ஆதரவு தேசியரீதியான ஆதரவு மூலம்தான் ஒரு முதலமைச்சர் வருவதற்கான சாத்தியப்பாடுகள் உண்டு.

 காரணம் சமூகங்கள் பிளவுபட்டதாக அரசியல் ரீதியான சிந்தனைகள் பிளவுபட்டதாக இருக்கின்ற காரணத்தால் தேசியரீதியான ஆதரவுடன் கூடிய முதலமைச்சர் வருவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமுண்டு. ஆனாலும் முஸ்லீம் காங்கிரசோ பாரியளவு வெற்றியை அங்கு பெறவில்லை.  தேசிய காங்கிரசிலே  அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசிலே போட்டியிட்டவர்கள் கூட அதேயளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். குறுகிய இனவாத மதவாத கட்சியான முஸ்லீம் காங்கிரஸ்கூட உண்மையில் பார்க்கப்போனால் பாரியளவு வெற்றியைப் பெறவில்லை. எவ்வாறு கூட்டமைப்பு பாரியளவு வெற்றியைப் பெறவில்லையோ அதேபோல் முஸ்லீம் காங்கிரசும் பாரியளவு வெற்றியைப் பெறவில்லை.


பேரினவாதத்திற்கெதிரான சுலோகங்களை பாரியளவு விழுங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்ததாக இல்லை. அதனால்தான் ஒரு இணக்கப்பாட்டில் கூட்டுச்சேர்ந்து கொண்டு ஆட்சியை அமைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு வந்தது. அந்தவகையில் தான் தங்களுக்கு ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் கூட தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தாம் தயாராய் இருக்கிறோம் ஜனாதிபதி அழைத்தால் தாம் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று சம்பந்தன் அறிக்கை வெளியிட்டார்.

இதன்மூலம் என்ன தெரிகிறதென்றால் ஆட்சியை கிழக்குமாகாணத்தில் தாம் தொலைப்பது என்பது அதிலிருந்து விடுபடுவதென்பது தமது எதிர்காலக் கனவிற்கு, தமது தன்னாட்சிக் கோரிக்கைக்கு, தமது பிராந்திய ஆளுமைக்கு,தமது 60 ஆண்டுகால அரசியல் வரலாறுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தப்போகிறது என்பதும் அந்தக் கோட்பாடுகளையே சர்ச்சைக்குரியதாக கேள்விக்குரியதாக மாற்றப்போகிறது என்பதையும் முஸ்லீம்கள் தம்மை முழுமையாக அங்கீகரிப்பவர்களாக இல்லை என்பதையும் உணர்ந்துதான் தாம்சார்பாக ஒரு முஸ்லீமை முதலமைச்சராகக் கொண்டுவரத் தயாரானார்கள். அந்தத்தயாரிப்பில் பாரிய இடி விழுந்திருக்கிறது.

அந்தத் தோல்வியில் இருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முஸ்லீம் காங்கிரஸ் மீது தற்போது தொடர்ந்து சுமத்தும்  குற்றச்சாட்டுக்கள் இன்னும் பாரிய பிளவை அங்கு ஏற்படுத்தும். முஸ்லீம் காங்கிரஸ் கபடநாடகம் ஆடிவிட்டது. பேரினவாத அரசின் கூட்டாளிகள், முஸ்லீம்கள் தமது புத்தியைக் காட்டிவிட்டார்கள் என்பது மாதிரியான விமர்சனங்கள் ஒருபோதும் சுமூகமான உறவைக் கொண்டுவராது. இது வெறுமனே ராவூப் ஹக்கீம் மீதான பாதிப்பாக இருக்காது. மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகங்களுக்கிடையில் முரண்பாடு வரும்போது முஸ்லீம்கள் தொப்பிபிரட்டிகள் ஏமாற்றுக்காரர்கள் என்ற பழிகளைச் சுமத்துவதை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ஆகவே மீண்டும் தமிழ் முஸ்லீம்களுக்குள் உள்ள உறவு என்பது பொய்யானது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.


நாக்கிலே நறுந்தேனும்
நெஞ்சிலே நீக்கிரை நெஞ்சம் கொண்டோன்
இன்சொல் உரைக்கின்றாhன் என்றென்றும் நம்பாதே.
என்சொல்லினும் செய்வான் இடர்.

என்பதற்கொப்பானவர்கள் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர். வரலாற்றில் முஸ்லீம்களுக்கு தீங்கிழைக்கப்பட்ட போதிலெல்லாம். வாய்மூடி ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். ஒருபுறம் சகோதரர்கள் என்பார்கள். மறுபுறம் அத்தனை கொடுஞ்செயல்களையும் ஆதரிப்பார்கள்.
இதைத்தான் சொல்கிறேன் என்சொல்லினும் செய்வான் இடர் என்று.

ஆகவே முஸ்லீம்கள் தமிழர்கள் என்பது இருதுருவங்களாகிவிட்டது. கிழக்கில்  இந்தமுறை முஸ்லீம் முதலமைச்சர் வந்தால் அடுத்த முறையும் முஸ்லீம் முதலமைச்சர் வரவே அவர்கள் விரும்புவார்கள். எப்போதும் எதிர்ப்பரசியல் செய்யாது சார்பு அரசியல் செய்து தமது அனுகூலங்களைப் பெற்ற சமூகம் தற்போதும் அரசசார்பு அரசியலூடாக பல அனுகூலங்களைப் பெறுவதன் மூலம் அடுத்த தேர்தலிலும் தமது சமூகத்தின் முதலமைச்சர் ஒருவர்வருவதையே அவர்கள் விரும்புவார்கள்.

 மலையகத்தில் எவ்வாறு தொண்டமான் வருகின்ற அரசோடு கூட்டமைத்து சார்பு அரசியல் செய்து தனது சமூகத்தை வளப்படுத்தினாரோ அதேபோல் மூஸ்லீம் சமூகமும் கடந்துவரும் காலங்களில் சார்பபு அரசியலை மேற்கொண்டு வளம்படுத்தும். 
ஆக, சம்பந்தனது தமிழத்தேசியக் கோட்பாட்டின் மீது மண் விழுந்திருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்.

நன்றி *முகநூல்* Katsura Bourassa 

»»  (மேலும்)

| |

வாசிப்பு மனநிலை விவாதம்- 3

வாசிப்பு மனநிலை விவாதம் 3வது தொடர் கடந்த ஞாயிறு (23-09-2012) நடைபெற்றது. கடந்த 2வது விவாதத்தில் கலந்து கொண்டவர்களோடு மேலும் பலர் அதிகமாக கலந்துகொண்ட  சந்திப்பு இதுவாக இருந்ததில் மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக பல இளைஞர்கள் புதிதாக கலந்து கொண்டதென்பது இவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதற்குரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்பில் விவாதிக்கப்பட இருந்த இரண்டு நூல்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை உதயகுமார் அவர்கள் முன்வைத்தார். உதயகுமார் அவர்கள் பிரான்சில் இயங்கிய ரி.ஆர்.ரி எனும் வானொலியில் அரசியல் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தி வந்தவர். புலிகளின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஜனநாயக பூர்வமான பல தரப்பட்ட கருத்துகளும் மோதுவதற்கான களமாக அந்த அரசியல் கலந்துரையாடலை நீண்ட காலமாக நடத்திவந்தவர். இவ்வாறான இலக்கிய-சமூக-அரசியல் பிரதிகளின் வாசிப்பும் அது பற்றிய கலந்துரையாடல்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தபடவேண்டும் என்று ஊக்கப்படுத்தியவர்களில் உதயகுமார்  அவர்களும் ஒருவர்.
உதயகுமார் அவர்களின் நூல் அறிமுகம்:வாசிப்பு மனநிலை விவாதம் 3வது தொடர் இது. இவ்வாறான நிகழ்வை நடத்தவேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு இருந்தோம் ஆனால் அது அப்போது கைகூடவில்லை. இருந்தபோதும் தற்போது இந்த நிகழ்வை நாம் 3வது தொடராக தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அந்தவகையில் சிறப்பம்சமாகவே இதை நான் கருதுகின்றேன். இன்று மிக முக்கியமான இரண்டு நூல்கள் குறித்து உரையாட இருக்கின்றோம். முக்கியமாக யோ.கர்ணன் அவர்களது சிறுகதைகள் குறித்து சொல்வதென்றால் யோ.கர்ணன் அவர்கள் ஒரு போராளியாக இருந்தவர். முள்ளிவாய்க்கால் அனுபவங்களோடு வாழ்பவர். அவரது எழுத்துகள் எமது ஆயுதப்போராட்டத்தில்  கட்டமைக்கப்பட்ட புனிதங்களையெல்லாம் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்தப்போராட்டத்தை  புனிதப்படுத்திய சம்பவம் புகலிடத்திலேயே கூடுதலாக நடைபெற்றது. இந்த புனிதம் எனும் பிம்பம் யோ.கர்ணனின் அனைத்துக் கதைகளாலும் உடைக்கப்படுகின்றது. உதாரணமாக சிலதைக் கூறலாம் இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்துக்கொடுப்பவர்களுக்கு ஒரு சையிக்கிள் பரிசாக வழங்கப்படுவது. புகலிடத்திலிருந்து போராட்டத்தை ஊக்கப்படுத்துபவர்களே பெண்போராளியாக முன்பு இருந்தவர்களை திருமணம் செய்ய தயங்குவது போன்ற பல சம்பவங்களை நாம் யோ.கர்ணனின் கதைகளில் காணலாம். யோ.கர்ணனின் அனைத்து கதைகளின் முடிவுகள்தான் வாசிப்பவர்களின் மனதை உலுப்புகின்ற சம்பவங்களாக அமைந்திருக்கும். இதே பாணியை நான் சோபாசக்தியின் கதைகளை வாசிக்கும்போதும் உணர்ந்திருக்கின்றேன். யோ.கர்ணனின் இவ்வாற்றலானது அவருக்கு  இயல்பாக அமைந்ததா! அல்லது பிற வாசிப்பு அனுபவங்களுடாக பெற்றாரா என்பது ஆச்சரியமாக உள்ளது. அவரது கதைகள் பற்றிய மேலதிக அனுபவங்களை நாதன் உங்களுக்கு கூறுவார்.
அடுத்ததாக கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’. இதில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்த சம்பவங்களை கூறுவதோடு, இலங்கையின் அரசியல் வரலாற்றையும் தொட்டுச் செல்கின்றது. இதில் வந்து சீனா, இந்தியா, ரசியா போன்ற நாடுகள் புலிகளை இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததென்பதாக கார்டன் வைஸ் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார். தலைவர் எது நடந்தாலும் இறுதியில் வெற்றிபெறுவார் என்பதாக மக்கள் இறுதிவரை நம்பியிருந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றார். அச்சம்பவத்தை நகைப்பிற்கிடமாக விபரிப்பதாகவும் உணரக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசிற்கு சீனா வழங்கும் ஆதரவை மேற்குலகம் கண்டிக்கமுடியாத சூழல் என்பதற்கான காரணமாக, சீனாவின் மிகப்பாரிய பொருளாதார வளர்ச்சியை இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.  சீனக்குடியரசை முதல் முதலில் ஆதரித்த நாடாக இலங்கை இருந்ததையும், அதன் அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனாவை மீறி இலங்கைப் பிரச்சனையில் தலையிடமுடியாத ஜக்கிய நாடுகள் சபையின் நிலை, அதையும் மீறி பாதுகாப்புச்சபை கூடினாலும் அது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாகவே இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் எடுப்பதை எதிர்த்து சீனாவும், ரசியாவும் உறுதியாக இருந்தது போன்ற தகவல்களும் பதிவாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் குறித்து நாங்களே அறிந்தவிடயமான வெளியேற முயற்சிக்கும் மக்களை கொன்ற சம்பங்களை தமிழரல்லாத கார்டன் வைஸ் அவர்களே உறிதிப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசானது தனது நாட்டின் இறைமையை பேணுவதற்காக யுத்தம் புரிவதையும் ஏற்றுக்கொள்கின்றார். வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு யுத்தத்தை நிறுத்துவதற்காக மக்கள் அதிகமாக கொல்லப்படுவதை புலிகள் விரும்பினார்கள், அதே நேரம் மக்களை புலிகளிடமிருந்து பிரித்தெடுப்பதிலேயே இராணுவம் மூர்க்கமாக செயல்பட்டது எனவும் பதிவு செய்துள்ளார். இருந்தபோதும் மக்கள் அழிவு குறித்து இரு தரப்புமே அக்கறைகொள்ளவில்லை என்றும் கூறுகின்றார். இவ்வாறு பதிவு செய்யும் கார்டன் வைஸ் அவர்கள் அரசாங்கம் எவ்வாறு இழப்பில்லாமல் மக்களை மீட்டிருக்க முடியும் என்ற கருத்தெதையும் முன்வைக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். கார்டன் வைஸ் அவர்கள் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் மக்களே கொல்லப்பட்டிருப்பார்கள் எனும் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
இன்று நாம் விவாதிக்கவுள்ள இரண்டு நூல்களுமே வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்த விளைவுகளையே பேசுகின்றது. அந்தவகையில் ’கூண்டு’ நூல் பற்றிய தனது கருத்தை   வாசுதேவன் அவர்கள்  கூற இருக்கின்றார். முதலில் யோ.கர்ணனின் சிறுகதைகள் குறித்து நாதன் ( அசுரா) பேசுவார்.
யோ.கர்ணனின் சிறுகதைகள் விமர்சனத்திற்குள்ளாகும் தன்மைகள், அக்கதைகள் குறித்த அசுராவின்: “தமிழ்த் தேசியத்தை சந்தைப்படுத்துவதற்காக மொழியும், இனமும் கிடந்து மாளும்”
உரையாடல்:
அரவிந் அப்பாத்துரை:   போர் முடிந்த பிற்பாடு இந்த வகையான கதைகள் இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கின்றது. இதில் வந்து புலிகள் மீதான விமர்சனம் நிறையவே உள்ளது. முதல் கட்ட வாசிப்பில் இவை விடுதலைப்புலிகள் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படும்.
நீங்க குறிப்பிட்டீர்கள் அப்படிப்பட்ட மனநிலையில் வாசிக்கவில்லை என்பதாக. அப்படியிருப்பினும் இப்படியாக முதல் முதல் எழுதப்படும் காரணத்தால் முதல் வாசிப்பில் புலி எதிர்ப்புக் கதைகளாகத்தான் பார்க்கப்படும் என்பது எனது ஒரு கருத்து. அது காலப்போக்கில் உங்களது வாசிப்பு நிலைக்கு வரலாம். ஆனால் முதல் வாசிப்பில் இவை புலி எதிர்ப்பு கதைகளாகத்தான் பார்க்கப்படும். இரண்டாவது வந்து சோபாசக்தி பற்றி பேசிநீங்க, அவரோட கம்பார் பண்ணிப் பேசிநீங்க. எழுத்தோட்டம் வந்து சோபாசக்தியின் எழுத்தோட்டமாகவே இருக்கின்றது. இதில வந்து ஒரு விசயம் புரியவில்லை  யோ.கர்ணன் சோபாசக்தியின் எல்லையை மீறியுள்ளார் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறீங்க!  இலக்கியத்தில் எல்லை மீறுவது வந்து என்ன மாதிரி என்பதைக் கொஞ்சம் தெளிவு படுத்துங்க.
அசுரா: நான் சொன்னது அனுபவம் குறித்ததுதான்.
அரவிந் அப்பாத்துரை: so உள்ளடக்கத்தில் அனுபவத்தில் அவருக்கு கிடைத்த பல சம்பவங்களையா?
அசுரா: ஓம் இயக்கக் கதைகளை  சோபாசக்தியூடாக நாங்க  அறிந்ததுதானே. அந்தவகையில்தான் அந்த அனுபவங்கள் யோ.கர்ணனிடம் அதிகமாக இருக்கும் என்ற வகையில் சொல்லப்பட்டதுதான் ‘எல்லை’ என்பது
அரவிந் அப்பாத்துரை: சோபாசக்தி வந்து புலிகள் பலமாக இருந்த சமயத்தில் இவ்வாறான கதைகளை எழுதினார். இப்ப அவ்வாறான நெருக்கடிகள் இல்லாதபோது இவர் எழுதுகின்றார். நீங்கள் சொல்வதுபோல் உள்ளடக்கம் பெரிதாக இருந்தாலும் கூட அந்த ‘எல்லை’ எனும் பிரச்சனை தான் மீண்டும் வருகின்றது. சோபாசக்தி கடந்த எல்லையை இவர் கடக்க முடியாதென்ற எண்ணம் எழுகின்றது. அவர் எழுதுகின்றபோது றெம்ப ஸ்ரிக்காக இருந்தது. ஓப்பினாக சொல்றன் அப்போது சோபாசக்தியை வந்து எல்லோரும் துரோகி  என்று சொன்னார்கள். ஆனால் இவரை யாரும் துரோகி என்று சொல்லப்போறதில்லை. சொல்லுறதுக்கு ஆக்களே கிடையாது.
சோபாசக்தி:  சொல்லுறாங்க.
அரவிந் அப்பாத்துரை: சொல்லுவாங்க ஆனால் அந்தளவிற்கு அபாயகரமானதாக இருக்காது.
அசுரா: யோ.கர்ணன் தமிழ்தேசியத்திற்கு எதிரானவர் என்று பலர் சொல்லுகிறார்கள் அவர் ஒரு தமிழ்த்தேசிய விரோதி என்ற கருத்துப்பட ஜமுனா ராஜேந்திரன், தமிழ்நதி, ரயாகரன் போன்றோர் எழுதியும் இருக்கிறார்கள். ‘ஐயனின் எல்.எஸ்.ஆர். எனும் கதை வந்து ஈ.பி.டி.பி இயக்கத்தையும் அதன் தலைமையையும் விமர்சிக்கும் கதை  அதன் காரணமாக யோ.கர்ணன் பல நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகியும் இருக்கின்றார்.
சோபாசக்தி: யோ.கர்ணன் மீது பலர் துரோகி என்ற பட்டம் சுமத்தி வருகின்றார்கள். தொடர்ச்சியாக இணையங்களை பார்த்து வருபவர்களுக்கு அது தெரியும். இன்று காலம்பிற கூட பத்துப்பேர் வரை எழுதியிருக்கிறார்கள் யோ.கர்ணன் ஒரு துரோகி, அரச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்பவர் என்று. மற்றது என்னையும் யோ.கர்ணனையும் ஒப்பிட்டு பேசிநீங்க. நான் இயக்த்தில் இருந்தது 3 வருசம். நான் இருந்த காலத்தில பெரும் சிக்கலான பிரச்சனைகள் இருந்ததில்லை. பிள்ளைகளை பிடிக்கேலாது, நினைச்ச உடனே யாரையும் சுட ஏலாது. நான் இருந்தது 86க்கு முன்பு. எனக்குத் தெரியாத பெரிய ஒரு உலகம் தெரியும் யோ.கர்ணனுக்கு. நான் 3 வருசம் என்றால், அவர் 10 வருசத்திற்கு மேலாக இயக்கத்தில் இருந்திருக்கிறார். எனக்கு இயக்கத்தில் இருந்ததில் ஒரு காயமும் கிடையாது அவர் ஒரு காலை இழந்திருக்கிறார். அதோட நான் வந்து ஈ.பி.டி.பி யை எதிர்த்தோ, புலிகளை எதிர்த்தோ, இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தோ எழுதியது இங்கு, புகலிடத்தில் இருந்து. நல்ல பாதுகாப்பா இருந்து எழுதினன். கர்ணன் இப்பவும் அங்க இருந்துகொண்டு எழுதிக் கொண்டிருக்கின்றார். நான் இலங்கையில் இருந்தால் இப்படி எழுதுவேனா என்பது சந்தேகம்தான். மனத் துணிச்சலுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த அவரது புத்தக வெளியீட்டில் இராணுவம் குறுக்கிட்டு அவரது புத்தகத்தையும் பறிச்சிருக்கிறது. இரண்டுதரம் கர்ணன் விசரணைக்கு சென்றிருக்கின்றார். இப்படியான இக்கட்டான சூழலில் இருந்து எழுதுவதென்பது மிகப்பெரிய சவால். அது மிகப்பெரியதொரு வேள்விதான்; கர்ணன் போன்றவர்கள் இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதென்பது. நாதன் முதலில் குறிப்பிட்டார் விடுதலைப் புலிகளின் எதிர்பாளர்களால் தான் கர்ணனின் கதைகள் விரும்பப்படுகின்றதென்றதொரு விமர்சனம் இருப்பதாக. அது உண்மை. கர்ணன் வந்து விடுதலைப் புலிகள் மீதான கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றார். நாங்கள் வைச்ச விமர்சனங்களெல்லாம் எங்களுக்குத் தெரிந்த 86க்கு முன்பு நடந்தவை பற்றியதும் இங்கு வந்ததன் பிற்பாடு யாரும் சொன்னதை வைத்தும் எழுதியது. ஆனால் அவர் இறுதிவரை உள்ளே இருந்து பார்த்தவர். முள்ளிவாய்க்காலில் இறுதிவரை இருந்தவர். அவர் வைப்பது இரத்தமும் சதையுமான விமர்சனம்.அதை யாராலும் மறுக்க முடியாது. நான் இப்படி எழுதினால் படிக்கும்போதே மறுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சோபாசக்தி யாரோ சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கின்றான் என்று. ஆனால் கர்ணனை மறுக்க ஏலாது. கர்ணன் அங்கிருந்த இரத்தமும் சாட்சியும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அந்தவகையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்…, இங்கும் கூட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் யாரும் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக கர்ணனை மறுப்பார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் கர்ணன் விடுதலைப்புலிகள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றார். அதேவேளை அரசாங்கத்தைப் பற்றியும், ஈ.பி.டி.பியை பற்றியும், இந்திய அரசாங்கத்தைப் பற்றியும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார். பொதுவாக இந்த விசயங்களையெல்லாம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கவனத்தில் எடுப்பதில்லைத்தானே! ஆயிரம் பக்கங்களில் அரசாங்கத்தை எதிர்த்து எழுதியிருந்தாலும் இரண்டு வசனம் புலிகளை எதிர்த்து எழுதினால் அவர்கள் கொந்தளித்து விடுவார்கள். ஆகவே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கர்ணனை எதிர்ப்பதோ அல்லது அவர்களது வழமையான உத்திப்படி  டக்ளசின் கைக்கூலி என்றோ, அரசாங்கத்தின் கைக்கூலி என்றோ போர்தொடுப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் கர்ணனை விரும்பி வாசிக்கின்றார்களா என்றால் அது உண்மை. அது எப்படி என்று சொன்னால் கர்ணனின் இந்தப்புத்தகம் இலக்கிய வட்டத்திற்குள் உலாவுகிற  புத்தகம். நம்ம இலக்கியவட்டங்கள்தான் இந்த புத்தகத்தை படிப்பார்கள். இலக்கியம் படிப்பவர்கள் யாரு? அவர்கள் எல்லாத்தையும் படிப்பார்கள்.  அவயள் நாலு கொம்யூனிசப் புத்தகத்தைப் படிப்பினம். நாலு ஜனநாயக புத்தகத்தைப் படிப்பினம், யு.என்.எச்.ஆர் அறிக்கை படிப்பினம். கூண்டு புத்தகத்தை படிப்பினம்.
ரூபன்:  ஆனந்த விகடனும் படிப்பினம்.
சோபாசக்தி: ஓம் ஆனந்த விகடனும் படிப்பினம். உதெல்லாம் படிக்கிறவன், சிந்திக்கத் தெரிந்தவன் ஓட்டமெற்றிக்கா விடுதலைப்புலிகளுக்கு எதிராகத்தான் மாறுவான். இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் அநியாயம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அரசாங்கத்திற்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு விடுதலைப் புலிகளிடமும் இருக்கின்றது. ஆகவே அரசியல் அறம் சார்ந்து சிந்திக்கத் தெரிந்தவன், ஒரு மனிதாபிமானி நிச்சயமாக விடுதலைப்புலிகளின் அரசியலுக்கு எதிராகத்தான் இருப்பான். ஆகவே அப்படியான ஒருவன் கர்ணனின் புத்தகத்தை விரும்புவதொன்றும் ஆச்சரியம் இல்லை. இவைகளுக்கு அப்பால நடுநிலையாக இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள்.  இந்த யுத்தத்தில் இரண்டு இலட்சம் பேர் செத்திருக்கிறார்கள், ஐம்பதுநாயிரம் பேர் அங்கவீனம், லட்சக்கணக்கானவர்களுக்கு பயித்தியம், ஐயாயிரம் பேர் இன்னும் பிறிசினில இருக்கிறார்கள். இப்படியிருக்க நான் அந்த பக்கமும் இல்ல… இந்தப் பக்கமும் இல்ல என்று சொன்னால் அவர்கள் மனிசர் இல்லை, அவர்கள் பிணம். இவர்களை நினைச்சால் ஒளவையார் சொன்னது தான் ஞாபகம் வருது ‘படிக்காதவன் முகத்தில் இருக்கும் கண் இரண்டும் புண்’ என்றார். எனவே அவர்கள் குறித்து பேசத் தேவையில்லை. சிந்திக்கத் தெரிந்தவன், அறிவுள்ளவன், ஒரு ஜனநாயகவாதி என்பவன் விடுதலைப் புலிகளின் அரசியலை எதிர்ப்பான், அதேவேளை அவன் இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க்கவேண்டும்! எல்லா அநியாயத்தையும் எதிர்ப்பான் அப்படி எதிர்ப்பவன் கர்ணனின் கதைகளை கண்டிப்பாக ஆதரிப்பான் விரும்புவான்.
அரவிந் அப்பாத்துரை: புலி ஆதரவு அரசாங்க எதிர்ப்பு என்பதை மீறி போர்காலத்தைப்பற்றி எழுதும் கதைகள் எல்லாமே விமர்சனக் கதைகளாகவே இருக்கும். போர்க் காலங்களில் நிகளும் பேரிழிவுகள் பற்றி யாரும் ஆதரித்து எழுத முடியாது. அதாவது வந்து நீங்க விடுதலைப் புலிகள் இயக்கத்தப்பற்றி எழுதினாலும் சரி, அரசாங்கத்தைப் பற்றி எழுதினாலும் சரி அல்லது எந்த இயக்கத்தைப் பற்றி எழுதினாலும் போர் நடந்த காலகட்டம் அதன் வெளி அது ஒரு விமர்சனத்திற்குரிய வெளிதான்.
அசுரா: அரவிந், சோபாசக்தி, வாசுதேவன் நீங்க படைப்பாளிகள்,  கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’பற்றிய ஒரு விமர்சனம் ஒன்றை பார்த்தேன் அதை இங்கு வாசிக்கிறேன் அதுபற்றிய அபிப்பிராயத்தையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறன்.“சிங்கள தமிழ் அரசியல் தலைமைகள் என இரண்டுமே சேகுவேராவின் ஆன்மாவைத் தீண்டமுடியாது. இதுவே மெய். பிறகு எதற்காக யோ.கர்ணன் தனது சிறுகதைத் தொகுப்பை கிறிஸ்தோபரின் வீடு என்பதற்கு மாறாக சேகுவேரா இருந்த வீடு என குறிப்பிடுகிறார். வீடு என்பது விடுதலை, வீடு என்பது நினைவுகள் வாழும் இடம், வீடு என்பது அங்கு வாழ்பவரின் முதுசம். சேகுவேரா ஒருபோதும் அவரது அரசியல் நோக்கில், புரட்சிகர ஆன்ம நோக்கில் இலங்கையில் நுழைந்திருக்கவில்லை.  நுழைந்தேயிராத ஒருவர் எவ்வாறு அந்த வீட்டில் குடியிருக்க முடியும்.சேகுவேரா இன்று ஒரு விளம்பரப்பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும், ஒரு மோஸ்தராகவும் ஆகமுடியும் என்பதற்கான சான்றுபோல்தான் யோ.கர்ணனின் சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாகவும் அவர் ஆகியிருக்கிறார்.” இப்படியான அபிப்பிரயத்தை எப்படி புரிந்து கொள்வது.
அரவிந் அப்பாத்துரை:  யாரு ஜமுனா ராஜேந்திரனா?
விஜி:  சேகுவேரா எனும் வார்த்தைக்கு இருக்கும்  புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார்.
தில்லைநடேசன்:  அது வந்து சும்மா ஒரு குறியீடுதான்.
உதயகுமார்:  கதையில் வரும் பாத்திரத்தின் இயக்கப்பெயர்.
சோபாசக்தி: தோழர்களே யமுன ராஜேந்திரனோடு கிட்டத்தட்ட 20 வருசமா மல்லுக்கட்டிக்கொண்டு வாறம் அதில உங்களவிட எனக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கு. அவர் ஒவ்வொரு தரம் ஒவ்வொன்று கதைப்பார். 2009 க்கு பிறகுதான் விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறியிருக்கிறார்கள் என்று கதைக்கிறார். 2009 க்கு முதல் அவர் கதைச்சது கிடையாது. முஸ்லிம் மக்களை துரத்தியது பற்றி ஒரு வார்த்தை கதைச்சதில்ல. அவர் வந்து…..அவர்…. பெரிய தொல்லைதான் எங்களுக்கு. அந்தாள் இப்படி எழுதிக்கொண்டுதான் இருக்கும். தொல்லைதான்….அதை எப்படி நிப்பாட்டிறதெண்டால்…. இந்த குளோபல் வெப்சைற் மாதிரி ஒரு வெப்சைற்றை நாங்களும் தொடங்கி… குளோபல் தமிழ் வெப்சைற் காரர் ஒரு பக்கத்துக்கு 100 பவுண் குடுத்தாங்கள் எண்டால் நாங்கள் ஒரு 150 பவுண் கொடுத்தம் எண்டால் தான் இந்த தொல்லையை நிப்பாட்டாலாமே ஒழிய வேற வழியில்லை. அவர் காசுக்கு எழுதுற ஆளுங்க. அதை அவரே ஒத்துக்கொண்ட விசயம். அவரைப்பற்றி எல்லாம் கதைக்கேலாது அதை விடுங்க.
விஜி: பெண்ணிய வாதிகளையும், புகலிட இலக்கிய சூழலையும் யோ.கர்ணன் சாடியிருக்கிறார் என்ற விமர்சனம் வைத்தவரும் ஜமுனா ராஜேந்திரன் தான். ஆனால் எனக்கும் தமிழ்கதை வந்து மிகவும்  பிடித்த கதை. புகலிடத்தில இருக்கிற தமிழ் தேசியவாதிகள் அல்லது தமிழ் ஈழத்தை நேசிக்கின்ற ஆக்களின் மனநிலை எப்படி இருக்குது என்பதை வெளிப்படுத்துற வகையிலதான் யோ.கர்ணனின் அநேகமான கதைகள் அமைந்திருக்கு. அங்கேயிருந்து போராடுகிற, அந்த சூழ்நிலைக்குள் இருக்கிற மக்களின் மனநிலை எப்படி இருக்கு, புகலிடத்தில கொடிபிடிக்கிற ஆக்களும், தேசியத்தை போற்றுகிற ஆக்களின் மனநிலையும் எப்படி இருக்கு என்பதை இந்த கதையில  அழகாக விபரிக்கபட்டிருக்கு. புகலிடத்தில் இருகிகிறவர்கள் வந்து அங்கே இருக்கிறவர்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேணும் எண்டு நினைக்கிறார்கள் இங்க தங்களது பிள்ளைகளெல்லாம் அப்படியெல்லாம் கலாச்சாரத்தை பாதுகாக்கத்தேவையில்லை. அங்கே இருக்கிற பெண்கள்தான தங்களது கலாச்சாரத்தை பாதுகாக்கவேணும் அங்கே இருக்கிற பெண்கள் சிங்களவர்களோட பழகேலாது, முஸ்லிம்களோட பழகேலாது.  உன்ர பெண்ணை சிங்களவனோடையா விட்டிருக்கிறாய் என்று ஒரு கவிஞர் பின்னூட்டம் விட்டிருப்பதாக சொல்லப்பட்டிருப்தெல்லாம்  அதுதான். இங்க இருப்பவர்கள் யாரையும் காதலிக்கலாம், எவரையும் விரும்பலாம், அங்க இருக்கும் பெண்கள் பத்தினியாகத்தான் இருக்கவேணும். சோபாசக்தியின் ‘கடவுளும் காஞ்சனாவும் ’ என்ற கதையில் சொல்வதுபோல் வைச்சாள் ஒரு வெடி காஞ்சனா கடவுளுக்கு என்பதான முடிவுகள் யோ.கர்ணனின் கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கு. ‘திரும்பி வந்தவன்’என்ற கதை அவ்வாறுதான் இருந்தது. வெக்கம் நளினத்தோட கூடிய பாலியல் தொழில் செய்யும் தமிழ் ஈழப் பெண் ஒருவரைத் தேடுவதும், அந்தப்பெண் இறுதியில் அசோக் அண்ணா என்னை விடுங்கோ இந்தவேலை செய்யுறா எண்டு  என்ர அம்மாவை நீங்கதானே சுட்ட நீங்க. என்ற அந்த முடிவை வாசித்ததன் பிறகு எனக்கு கொஞ்சநேரம் ஒன்றும் செய்ய ஏலாமல் போய்விட்டது.
அசோக் பிரகாஸ்:  எனக்கும் அந்தக்கதை மிகவும் பாதித்தது.
விஜி:  அதேபோல ‘அரிசி’ என்ற கதையும் மிகவும் பாதித்த கதை. ஒரு தாயின் இழப்பென்பதை அதை அனுபவித்தவர்களால்தான் உணரமுடியும் இறந்த தாயின் இரத்தில் ஊறிய அரிசியை மகள் கழுவிக்கொண்டிருப்பதை பார்பதில் கதை முடிவடைகிறது. சடலங்களுக்கு மத்தியிலும் தாயின் மரணத்தையும் தாண்டி அடுத்த நேர சூழலை விபரிக்கும் விதம் மிகக் கொடுமையானது. நாதன் சொன்னது மாதிரி யோ.கர்ணனின் கதைகள் உணர்வு ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவைகளை வந்து வெறும் புலி எதிர்ப்புக் கதையாக என்னாலும் பார்க்கமுடியவில்லை. இந்த தமிழ் தேசியவாதிகளிடம் இருக்கும் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கிற கதைகள்தான் எல்லாமே. ஏன் இந்தபோராட்டம் பாழாப்போனது என்பதற்கான கேள்விகளாகத்தான் இருக்கிறது. தேசியத்தை விரும்புகிறவர்களோ, தமிழ் ஈழத்தை  விரும்புகிறவர்களோ இந்தப்போராட்டத்தில் என்னென்ன பிரச்சகைள் நடந்திருக்கிறதென்பதை யோசிப்பவர்களாக இருப்பின் யோ.கர்ணனின் கதைகளில் வரும் முடிவகளிலிருந்து சிந்திக்கவேண்டும். அப்போதுதான் புதிய ஒரு வழியை தேடமுடியும். அந்தக் காலத்தில் புளொட் இல் இருந்த எனக்கு தெரிந்த பெண்கள் பலர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். இயக்கத்தில் இருக்கும்போது சக தோழிகளை விரும்பிய ஆண்கள் அவர்களை வேண்டாம் எனக்கூறி வேற திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். அப்படியான பெண்கள் இன்றுவரை திருமணம் முடிக்காமல் இருப்பதும் எனக்குத் தெரியும் அதற்கு ஒரே ஒரு காரணம் இயக்கத்தில் இருந்ததுதான். இதே போன்ற சம்பவத்தைதான்  ‘திரும்பி வந்தவள்’எனும் கதையும் சொல்லுகிறது. ஊரில் இருக்கும்போது காதலித்தவர்களில் ஆண் வெளிநாடு வந்ததன் பிற்பாடு காதலித்த பெண் சூழ்நிலை காரணமாக இயக்கத்திற்குபோய் ‘திரும்வி வந்தவள்’. அதன் காரணமாகவே புகலிடத்தில் இருப்பவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார். அதே நேரம் புகலிடத்தில் ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கொடியேந்திப் போராட்டம் செய்த அவரது புகைப்படம் பத்திரிகையில் வருகிறது. புகலிடத்தில் இருக்கிற தேசிய வாதிகள் ஊரில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்கவேணும் என்று கருதுகின்றாங்கள்  என்பதையும்,  புகலிடத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாங்கள் என்பதையும்  காட்டுவதாகத்தான் யோ.கர்ணனின் சில கதைகள் அமைந்திருக்கிறதாக நான் நினைகிறன்.
துரைசிங்கம்: சேகுவேரா இருந்த வீடு என்ற கதையின் பெயர் பற்றி எனக்கு தெரிந்த ஒருவிடயம். முன்பு காசிலிங்கம் என்ற பத்திரிகை ஆசிரியர் 71ஆம் ஆண்டின் ஜே.வி.பி இயக்கத்தின் கிளர்ச்சி  பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் ஜே.வி.பியை சேகுவேரா என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார். பாமரமக்கள் மத்தியிலும் சேகுரோ இயக்கம் என்றே பேசப்பட்டும்வந்தது. இயக்கத்தில் இருந்தவர் பெயர் சேகுவேரா என்பதாகவும், இயக்கத்தின் உபயோகத்தில் அந்த வீடு இருந்ததாலும் ஒரு குறியீட்டுப்பெயராக சேகுவேரா என்ற பெயர் வைத்தில் தவறில்லை என்பது எனது அபிப்பிராயம். மற்றது இப்படியான கதைகள் வந்து கூடுதலாக வந்துகொண்டிருக்கு. விடுதலைப் புலிகளுக்கு எதிராகவெல்லாம் கதைக்கிறார்கள். சரி,பிழைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளிடமும் சரியான விசயங்கள் கனக்க இருந்தது. போராட்டத்தில கனக்க இருந்தது அதை சொல்லேலாது எனக்கு. அந்தப்பக்கங்களை ஒருதரும் பாக்கிறதில்ல. விமர்சனக் கண்ணோட்டத்தில பார்க்கும்போது தனிய பிழைகளைமட்டும்தான் பார்க்கப்படுகின்றது.
சோபாசக்தி:  ஒரு சரியை சொல்லுங்கோவன்.
துரைசிங்கம்:  உதாரணமாக சொல்லப்போனால், அவர்களில் கனக்க பிழைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இருணுவமுகாம் தாக்குதல்கள், உதாரணத்திற்கு ஆனையிறவு இராணுவ முகாம் வந்து எங்களுக்கு முக்கியமான ஒரு தளம். அதை தகர்க்கிறதுக்காக இரண்டு தரம் முயற்சி செய்யப்பட்டது. அப்போது பல இழைப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்படியும் அது அழிக்கப்பட்டது. அதற்காக மற்றைய இயக்கங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் செய்திருப்பார்கள். ஆனால் அதை விடுதலைப் புலிகள் விடயில்ல. இருந்தும் அப்படி செய்திருக்கிறார்கள் அப்படியான விசயங்களில் அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.
சோபாசக்தி:  ஓம்… யோ.கர்ணன் ஆக்கள்தான் ஆனையிறவு அடிச்சது.
துரைசிங்கம்: அவர்களது இழப்புகளையெல்லாம் நான் நேரில் இருந்து பார்த்ததால சொல்லுறன். தொழில் நுட்பங்களிலெல்லாம் ஒரு வளர்ச்சி இருந்தது. அதுகளை ஒருதரும்  சுட்டிக்காட்டவில்லை. இப்படியெல்லாம் சொல்லுவதை நான் பிழை என்று சொல்லவில்லை. இரண்டு பக்கமும்  சொல்லவேணும் என்பதுதான் என்ர அபிப்பிராயம். முன்பெல்லாம் அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள்  எல்லாமே விடுதலைப்புலிகளை புகழ்ந்துதான் எழுதுவார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த  றொபேட் என்பவரோடு  நான் ஒரு முறை கதைத்தபோது அவர் எனக்கு சொன்விசயம், இப்போது விடுதலைப் புலிகளை போற்றி எழுதுபவர்கள் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதுவார்கள் என்று. அவர் சொன்னது தீர்கதரிசனமாக இன்று நடக்குது. இதில நான் சொல்லவாற விசயம் என்னவென்றால் இயக்கத்திற்கு வெளியால இருந்தவர்கள் கதைக்கிறத விட இயக்கத்துக்குள் இருந்தவர்களே இப்போ கதைக்க வந்துள்ளார்கள். அந்தவகையில் யோ.கர்ணனின் கதைகளை புலி எதிர்ப்பாளர்கள் என்றில்லாமல் வாசிப்பவர்கள் எல்லோரும்  ஏற்றுக்கொள்வார்கள்  என்பதுதான் எனது கருத்து.
‘கூடு’ பற்றிய உரையாடல் மிக விரைவில்
»»  (மேலும்)

| |

'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்'

அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றிடங்களை வழங்கும்வரை அவர்களின் காணிகளை இராணுவமுகாம் அமைக்கும் தேவைக்காக சுவீகரிப்பதை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கேசன்கேணி மக்களில் சிலர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்பு பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டியிருப்பதால் அங்கிருந்து தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்த அறிவித்தலை அடுத்து பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்னும் 50 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கேசன்கேணி மக்கள் வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
இந்த மனுதொடர்பில் அரச தரப்பு விளக்கங்களை முன்வைத்த சட்டமாஅதிபர், இராணுவமுகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றிடங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறினார்.
குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு அந்த தொழிலை கொண்டுநடத்தக்கூடிய விதத்திலான மாற்றுக்காணிகளே வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் அக்டோபர் 17-ம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அன்றைய தினம் அறிவிக்கவேண்டும் என்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
»»  (மேலும்)

9/29/2012

| |

மூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசியத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண மாகாண சபை முறைமையினை ஏற்று கொண்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஏமாற்றும் அரசியலை கை விட்டு ஒதுங்கவேண்டும்

ஒரு சமூகத்தின் அடிகட்டுமானமாக உள்ளது அரசியல் அதிகாரமாகும். அவ் அரசியல் அதிகாரத்தினை பேணி பாதுகாத்து தக்கவைப்பதன் மூலமே குறித்த சமூகம் தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கிழக்கு மாகாண தமிழர்கள் மாகாண சபையில் அரசியல் அதிகார இருப்பை இழந்து நிற்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக வாக்களியுங்கள் என்று கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முஸ்லிம் தேசியத்தினையும்,சிங்கள தேசியத்தினையும் இணைத்து ஆட்சி அமைக்கச் செய்து எதிகட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அரசியல் ஆலோசனை வழங்குகின்றது. இதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். எச் சமூகம் அதிகார பகிர்வு கேட்டு போராடியதோ, அச் சமூகத்தினை எதிர் கட்சி ஆசனத்தில் இருத்தி விட்டு மாகாணசபையில் ஆளும் கட்சி முறையினை இல்லாமல் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ,பிள்ளையானோ மட்டக்களப்பையும்,கிழக்கு மக்களையும் விட்டு,விட்டு ஓடப் போவதில்லை.
மக்களுக்காக சேவை செய்ய தயாராகவே இருக்கின்றோம்.
முதல் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக மாறி இருக்கிறதே தவிர
வேறு எது வித மாற்றமும் இல்லை.
எந்த பிள்ளையானை இல்லாமல் செய்ய வேண்டும் என்று யார்ல் தலைமைத்துவங்கள் எல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு கிழக்கு நோக்கி படையெடுத்ததோ, அந்த பிள்ளையானை மட்டக்களப்பு மக்கள் ஏமாற்றவில்லை. என்பதனை குறித்த தலைமைத்துவங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சம்பந்தர் அவர்களுக்கு,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு  விடுக்கின்றேன்.  தமிழ் தேசியம்,வட-கிழக்கு இணைப்பு என்று கோஷமிட்டு கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்கள் முடிந்தால் 03 வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசியத்தினை பெற்றுக்
கொடுக்க வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண மாகாண சபை  முறைமையினை ஏற்று கொண்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஏமாற்றும் அரசியலை கை விட்டு ஒதுங்கவேண்டும். என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளி கிழமை(28.09.2012) மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

»»  (மேலும்)

| |

எதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண்டும் - சி.சந்திரகாந்தன்


தமிழ் மக்களை நடுக்கடலில் தள்ளிவிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு
வட-கிழக்கு மாகாணத்தினை தாயக பூமி என்று கூறிக்கொண்டு இருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் 41% தமிழர்கள் இருந்தும் ஆட்சியமைக்க முடியாது எதிர் கட்சி ஆசனத்தில் போய் அமர்ந்துகொண்டு ஜனநாயகமற்ற நிலையில் எதிர்கட்சி தலைவர் தெரிவில் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறது.
யதார்த்த ரீதியாகவோ,ஜனநாயக ரீதியாகவோ நடந்துகொண்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட துரைரெட்ணத்திற்கே எதிர்கட்சி தலைவர்
கொடுக்கப்படவேண்டும். கடந்தவருடம் மாகாணசபை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையிலும்,மட்டக்களப்பு மக்கள் 104,000 வாக்குகள் வழங்கியுள்ள நிலையில் மக்களை ஏமாற்றாமல் மட்டக்களப்பிற்கே
எதிர் கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக தண்டாயுதபாணிக்கு வழங்கப்படுமானால் அது ஜனநாயகத்தினை மதிக்காத யாழ் மேலாதிக்க தலைமையாகவே தொடரும் பொறுப்பற்ற செயலாகும்.
என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

9/28/2012

| |

வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா,
வீதி விபத்தொன்றை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இன்று மாலை செங்கலடி செல்லம் படமாளிகையின் முன்னாலேயே மேற்படி விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது பிரசன்னாவே வாகனத்தை செலுத்தி வந்துள்ளார்.
படகாட்சி முடிந்து வீடு திரும்பிய சுரேஷ்(22) எனும் செங்கலடியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு வாகனத்தால் மோதுண்ட நிலையில் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டும் வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்லாது,வேறு ஒரு வாகனத்தை பயன்படுத்தி விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார் பிரசன்னா.
இந்த சம்பவம் தொடர்பாக பிரசன்னாவின் சாரதி ஒருவர் பிரசன்னவிட்கு
பதிலாக போலீசில் சரணடயவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"மக்களை காப்பாற்ற வேண்டியவர்களே நடுத்தெருவில் மக்களை கை விட்டு ஓடுவது சரியான செயலாகுமா........??????"
»»  (மேலும்)

| |

தமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிரவாதி அல்ல: த.மு.மு.க

'இந்திய இராணுவ ரகசியங்களுடன் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி என்ற இளைஞர், ஒரு புகைப்படக் கலைஞராவார். 
அவர் இலங்கையில் காய்கறி வியாபாரம் தான் செய்துவருகிறார். துவிர, அவர் தீவிரவாதியோ அல்லது அந்நிய கைக்கூலியோ அல்ல' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
'26.09.2012 அன்று த.மு.மு.க.வின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை. இந்திய பொலிஸார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அந்நிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர், குஜராத், டெல்லி, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை இந்திய கியூ பிரிவு பொலிஸார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கியூ பிரிவு பொலிஸாரின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. தமீம் அன்சாரியை திருச்சியில் வைத்து கைது செய்த பொலிஸார், அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய இராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேரை தொடுவாவ கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர். 
'நிர்மணி' என்ற படகு மூலம் பயணிக்க முயன்ற இந்த 77பேரில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் இரு முஸ்லிம்கள் அடங்குவதோடு, பெண்ணொருவரும் அவரது கைக்குழந்தையும் இக்குழுவில் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 
இவர்கள், முகத்துவாரம் முறைமுகத்தக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வப் பிரிவினர் அவர்களிடம் மேலதி விசாரணைகளை நடத்தி வருவதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறினார். 
»»  (மேலும்)

| |

மண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது


(படங்கள்-சதிஸ்)
மண்முனை மேற்கு  வலயகல்வி அலுவலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
வவுணதீவு குறிஞ்சாமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரஷாந்தன்,
வலயகல்வி பணிப்பாளர் பாஸ்கரன்,வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், வவுணதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் உட்பட மாணவர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேற்படி கல்விவலயமானது முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.



»»  (மேலும்)

| |

இஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது

உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் “இன்னஸன் ஒஃப் முஸ்லிம்ஸ்” என்னும் படத்தினை தயாரித்த நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சட்ட நிறுவனம் அதிகாரி டொம் முரோஸக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் படத்தினை தயாரித்து நெறிமுறைகளை மீறி அதனை இணையத்தில் வெளியீடு செய்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா (வயது 55) என்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபருக்கு பிணைவழங்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் கலகங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவே பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தினை சந்தேகநபர் செய்துள்ளதாகவும் நீதிபதி சுஸானி எச்.சீகல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சீமென்ஸ் நோக்கியா நிறுவனத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி, இந்நிலை மாறவேண்டும் என வலியுறுத்தி, நோக்கியாவின் தலைமையகம் ஃபின்லாந்து நாட்டில் அமைந்திருப்பதால், சென்னையில் உள்ள அந்நாட்டுத் துணை தூதரகத்தின் முன் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான சிஐடியூவின் சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற அணித்தலைவர் ஏ.சௌந்திரராஜன் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர் என்றும் அவர்களில் 80 சதமானோர் ஒப்பந்தப்பணியாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்தவித உரிமைகளும் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
அவர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது,, இந்நிலை தொடருமானால் கொந்தளிப்பு ஏற்படக்கூடும், அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது மனிதவளத்துறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கிவரும் ஜி.எஸ் ரமேஷ் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவே பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன, அவை இங்கு கால் பதிப்பதால் நம் நாட்டு பொருளாதார வளமும் கூடுகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றார். தவிரவும் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் இலாபத்தைப் பெருக்க முடியும் என்ற நிலையில் பல்வேறு அணுகுமுறைகளை நிர்வாகங்கள் கைக்கொள்வது தவிர்க்கவியலாதது, உலகப் பொருளாதாரம் செழிக்கும்போது இயல்பாகவே இங்கும் ஊதியம் உயரும், அதே நேரம் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகாத வண்ணம் நிர்வாகங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
»»  (மேலும்)

| |

கி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்

கிழக்கு மாகாணசபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

திருகோணமலை நகரில் உள்துறைமுக வீதியிலுள்ள முந்தைய பிரதம செயலகக் கட்டடத்தில் தனது  செயலகத்தை  முதலமைச்சர் அமைத்துள்ளார். 

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் செயலகம் வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலகத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்துதான் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தனது கடமைகளை செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.  

வடக்கு - கிழக்கு மாகாணசபை இரண்டாகப்  பிரிக்கப்பட்ட பின்; வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகம் முதலில் வரோதய நகரில் இயங்கிவந்தது. கிழக்கு மாகாணசபையின் செயலகம் திருகோணமலை நகரில் உள்துறைமுக வீதியில்  இயங்கிவந்தது.

வடக்கு மாகாணசபையின் செயலகம் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் வரோதய நகரில் இருக்கும் பிரதம செயலகக் கட்டட வளாகம் கிழக்கு மாகாணசபைக்கு கையளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திருகோணமலை நகரிலிருந்து இயங்கி வந்த கிழக்கு மாகாணசபையின் அமைச்சுக்கள் மற்றும் முதலமைச்சரின் செயலகம் அனைத்தும் வரோதய நகரிலுள்ள  செயலகக் கட்டங்களுக்கு மாற்றப்பட்டன.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட முதலமைச்சர், பொதுமக்களின் போக்குவரத்து வசதி கருதி தனது முதலமைச்சு செயலகத்தை மீண்டும்  பழைய இடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.
»»  (மேலும்)

| |

தொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவதற்காக நடத்தப்படும் பரீட்சை ஒன்றில் கேட்கப்படும் கேள்விகள் போல கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு தவறான பதிலகளைத் தந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மான் நடத்தும் "லேட் ஷோ" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேமரன் அவரது கேள்விக்கணைகளில் சிக்கினார்.
பிரிட்டனின் மிகவும் பிரசித்தி பெற்ற, தனியார் பள்ளியான ஈட்டன் பள்ளியிலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த கேமரன், 1215ம் ஆண்டு கையொப்பமான, பிரிட்டிஷ் மன்னர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் "மேக்னா கார்ட்டா" என்ற ஆவணத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன என்று சொல்லத்தெரியாமல் திணறினார்.( அந்த ஆவணத்துக்கு "பெரும் பிரகடனம்" என்று பொருள்).
அதே போல தேச பக்தப் பாடலான " ரூல் பிரிட்டானியா" என்ற பாடலை யார் எழுதியது என்பது குறித்தும் அவருக்குத் தெரியவில்லை. 1740ல் இந்தப் பாடலுக்குத் தாமஸ் ஆர்ன் என்பவர் இசையமைத்தார். ஆனால் கேமரனோ, இந்தப் பாடலுக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இசையமைப்பாளர் எட்வர்ட் எல்கார் இசையமைத்தார் என்று தவறாகக் கூறினார்.
»»  (மேலும்)

| |

வன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09-2012 தினமுரசு நாளிதழ் தலையங்கம்)

கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை வன்னி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இன்று வன்னிப் பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகப் பகுதியில் சிரமதானப்பணியில் ஈடுபடுகின்றனர். பற்றைகள் வளர்ந்துவிட்டிருக்கும் பொறியியல்பீட வளாகப் பகுதியிலேயே இந்த மாணவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
மாணவர்களை அரசியல் நோக்கிலேயே இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகை விசனச் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னி மண்ணில் பல்கலைக்கழகம் அமைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் என்ன அரசியல் நோக்கம் இருக்கமுடியும் என்பதை அப்பத்திரிகை விளக்கவில்லை.
எல்லாச் செயல்களிலும் அரசியல் கலந்திருக்கிறது என்கிற அடிப்படை விளக்கத்திலிருந்து, அப்பத்திரிகை கண்டுபிடிக்க முனையும் அரசியல் நோக்கம் எதுவாக இருக்கும் என்பதை நாம் கொஞ்சம் விளக்க அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.மக்களுக்கு கல்வி கிடைக்க வழி செய்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், இருப்பிடங்களை அமைக்க, வறுமையைப் போக்க, போக்குவரத்தைச் சரிசெய்ய, நிம்மதியாக வாழ வேண்டிய அபிவிருத்திகளைச் செய்தல், வாழ்வாதார வசதிகளை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல், வீழ்ந்துகிடக்கும் மக்களது வாழ்க்கையை உயர்த்துவதன் மூலம் அடுத்தகட்டமாக அவர்களை தன்னம்பிக்கையுடன் விழிப்படையச் செய்து அரசியலுரிமைகளைப் பெற முயற்சித்தல் என்பது ஒரு வகையான அரசியல் நோக்கம் எனலாம்.
தேர்தலுக்குத் தேர்தல் பதவிகளைப் பிடித்துக் கொள்வதற்காக வந்து வாக்குகள் கேட்டல், மூன்று வருடங்கள் என்ன முப்பது வருடங்களாகவும் தேர்தலில் வென்றால் தீர்வு வந்துவிடும் என்று சொல்லியே வாக்குக் கேட்டுக் கொண்டிருத்தல், தேர்தல் முடிந்தவுடன் உட்கட்சிக்குள்ளேயே ஒருவரை எதிர்த்து ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருத்தல், ஓய்ந்த நேரத்தில் அரசாங்கத்தை எதிர்த்தும் உணர்ச்சிபொங்க குற்றச்சாட்டுகளை வீசி மக்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு உலகம் சுற்றிவருதல், தேர்தல் வேலை செய்த தொண்டனுக்குக் கூட காசு கொடுக்காமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைவர்கள் சொத்துச் சேர்த்துக் கொள்ளுதல், நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அரசாங்கத்திடம் பின்கதவால் சென்று சலுகைகள் பெற்றுக் கொடுத்தல் போன்ற அதிமுக்கிய வேலைகளும் இன்னொரு வகையான அரசியல் நோக்கத்தின் கீழ் வருவன எனலாம்.
இதில் எந்த அரசியல் நோக்கத்திற்காக இன்று மாணவர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அப்பத்திரிகை குறிப்பிட்டு விசனமடைந்திருக்கலாம். ஒருவர் மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை களவாடிக்கொண்டு தப்பியோடிப் பின்னர் அரசபடையினரின் இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கித் தமிழ்த்தேசியம் பேசி பதவி பெற்றுக்கொள்வதிலும் அரசியல் நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல, தன்னுடைய பாடசாலை மாணவர்களை வற்புறுத்திப் போர்க்களமுனைக்கு அனுப்பிச் சாகக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் செஞ்சிலுவைச்சங்க வாகனத்திலேறித் தப்பியோடிவந்து எம்.பி. வாழ்வைப் பெற்றுக்கொண்டவருக்கும் இருந்தது அரசியல் நோக்கம்தான். இவர்களெல்லாம் வன்னியில் பல்கலைக்கழகம் அமைவதை ஏன் பொறுக்க முடியாமல் விசனப்பட்டபடி இருக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.
இதே தமிழரசுக் கட்சியினர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக வேடந்தாங்கிநின்று யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க முடிவெடுக்கப்பட்ட வேளையிலும் எதிர்ப்புத் தெரிவித்து நின்றவர்கள். இடதுசாரிகளும் தம்மால் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்ட அல்பிரட் துரையப்பா போன்றவர்களும் சேர்ந்து சாதித்தால் அது வரலாற்றில் பதிவாகி தமக்கு நிரந்தர இழுக்காகிப் போய்விடும் என்ற வெப்பிசாரத்திலேயே அன்றும் எதிர்த்தார்கள்.
தமிழ் மக்களுக்கு நன்மையான விஷயம் நடக்கிறதே என்று இவர்கள் பார்ப்பதேயில்லை. தங்களது அரசியல் லாபங்களுக்குச் சரிவராவிட்டால், ‘மூக்குப் போனால் போகிறது, எதிரிக்குச் சகுனப் பிழையாக்குவோம்’ என்றே இவர்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள். அதன் பிரதிபலனே நமது மக்களது அழிவுகளும் ஒட்டுமொத்த சமுதாயப் பின்னடைவுமாகும்.
1974-ல் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்துவிடாமல் தடுப்பதற்காக இவர்கள் பல சிரிப்புக்கிடமான கதைகளை எல்லாம் மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டார்கள். சேர்.பொன்.இராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அந்தப் பாடசாலை இல்லாமல் போய்விடும் என்றார்கள். அதாவது எங்கள் மக்களுக்கு பிரியாணி வேண்டாம் கஞ்சியே போதும் என்பதே இவர்கள் கொள்கை.
அப்போதும் தமிழ்மக்கள் கல்வியிலே அக்கறை கொண்ட நல்லவர்கள் இவர்களுக்குப் பதிலளித்தார்கள். திருநெல்வேலியில் தனது மனைவியின் பெயரில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியையும், மருதனார்மடத்தில் தனது பெயரில் இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் இராமநாதன் தம்பதிகள் அமைத்ததின் நோக்கம், எதிர்காலத்தில் அவற்றை பல்கலைக்கழகத் தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கும் நோக்குடன்தான் என, இந்த எதிர்ப்பரசியல் விண்ணர்களுக்கு அவர்கள் விளங்கப்படுத்தினர்.
மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால், அங்கு பயிலும் மாணவ மாணவியரின் ‘சேஸ்டை’களைப் பார்த்து, இதர பாடசாலை மாணவர்களும் ‘கெட்டு’ப் போய்விடுவார்கள் என்றும் குழப்பிப் பார்த்தார்கள். சிங்கள மாணவர்களும் கற்பதற்கு வருவார்கள், அதன்மூலம் சிங்கள ஆதிக்கம் சிங்களக் குடியேற்றம் எல்லாம் வரும் என்றும் வழமையான இனவாதக் குண்டுகளையும் தூக்கிப் போட்டார்கள்.
இவர்கள் அன்று தொடக்கிவைத்த தமிழ் மக்களுக்கெதிரான அழிவுப் பாதையையே இன்றும் தமிழ்மக்களுக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளஞ்சமுதாயத்தைக் கல்வியறிவற்றவர்களாக்கி இவர்களது ரோசத்திற்கான யுத்தத்தில் அவர்களைப் பலிக்கடாக்களாக்குவதிலேயே குறியாயிருக்கிறார்கள். இப்போதும் அதே பாணிகளிலேயே கிளிநொச்சியில் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். அங்கு பல்கலைக்கழகம் அமைந்த பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் செய்ததைப் போல, அதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான குத்துக்கரணங்களையும் உடனடியாகவே தொடங்கிவிடுவார்கள்.
பல்கலைக்கழக நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு கல்விச்சமூகம் விசனப்படுகிறதாம் என்று இன்றைய வயிற்றெரிச்சல் ஜோக்குகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இவர்களாகவும் தமிழ்மக்களுக்குப் பிரயோசனமான எதையும் எடுத்துக் கொடுக்கவும் மாட்டார்கள். மற்றவர்களாலும் மக்களுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் பார்ப்பார்கள். இவர்களுக்கென்றே தமிழில் உள்ள பழமொழியையும் நாகரிகம் கருதி இங்கு எழுதாமல் தவிர்க்க வேண்டியிருக்கிறது.
»»  (மேலும்)

9/27/2012

| |

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு


கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது அமர்வானது எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது .
மாகாண சபை தேர்தலின் பின்னர், இடம்பெறும், இரண்டாவது அமர்வின் முதல் நாள் நிகழ்வாக மேற்படி அமர்வு அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)