சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு வழங்கும் ரகசிய ஆவணம் ஒன்றில் ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டிருப்பதாக இது தொடர்பாக விபரமரிந்தோர் மூலம் தெரிய வந்திருப்பதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் உத்தரவை ஜனாதிபதி இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிறப்பித்திருப்பதாகவும் அதில் அசாத் அரசை வெளியேற்றுவதற்கு கிளர்ச்சி யாளர்களுக்கு தேவையான உதவியை வழங் கும்படி அவர் அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ. மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அசாத் அரசுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே அமெரிக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்ப ட்டுள்ளது.
எனினும், சி.ஐ.ஏ. போன்ற உளவு நிறுவனங்கள் எவ்வாறு உதவி அளிக்கின்றன என்பது குறித்து தெளிவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சிரிய அரச படை தலைநகர் டமஸ்கஸ்ஸில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இரு வேறு தாக்குதல்களை நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளது. அதில் குறைந்த 70 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்போது அரச படை வீடு வீடாக சோதனை நடத்தி எதிர்ப்பாளர்களை கைது செய்ததாக செயற் பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பல தீவிரவாதிகள் கைதானதாகவும் மேலும் பலர் மோதலின் போது கொல்லப்பட்டதாகவும் சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மறுபுறத்தில் அலப்போ நகருக்கு அண்மையில் இருக்கும் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விமானத் தளத்தில் இருந்து தாக்குதல் நடத்த பயன்படுத்தும் டாங்கியையும் கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் தென்மேற்கு டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியான ஜனததத் ஆர்தவுர் பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்புப் படையினர் தமது அடை யாள அட்டையை சோ தனை செய்து, செல்ல அனுமதித்ததாக அங்கிருக் கும் குடியிருப்பாளர் ஒருவர் ராய்ட்டருக்கு கூறியுள்ளார். இதன்போது தாம் செல்லும் வழியில் குறைந்தது 35 உடல்களை கண்டதாகவும் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் இருப்பதா கவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவி விலகக் கோரும் தீர்மானத்தின் மீது ஐ.நா. பொதுச் சபையில் இன்று வாக் கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அரபு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தின் மீதே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. எனினும் இந்தத் தீர்மானம் ஓர் அடையாளமாகவே கருதப்படுகிறது.
இதன் மூலம் சிரிய அரசுக்கு எதிரான சர்வதேச உடன்பாடொன்றை எட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களின் மீதும் சீனா, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.
தனது பதவியை மேலும் நீடிப்பதில்லை என்று அன்னான் அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
சிரியா நெருக்கடி தொடர்பில் அன்னான் ஆற்றிய பணிகளுக்கு தான் மிகுந்த நன்றியை கூறுவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.
சிரியா மோதல் வலுக்கிறது
இதற்கிடையே, சிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் இருந்து கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு இராணுவம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நகரின் உள்ளேயும், வெளியேயும் சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது துப்பாக்கி பொருத்திய ஹெலிக்கொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த விமானப் படைத்தளத்தின் மீது, தாம் கைப்பற்றிய சிரிய இராணுவத்தின் தாங்கி மூலம் கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை டமாஸ்கஸில் 70 கும் அதிகமான ஆட்களை ஒட்டுமொத்தப் படுகொலை செய்ததாக அரசாங்கப் படையினர் மீதும், ஆயுதக்குழுக்கள் மீதும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தலைநகரிலும் சண்டை தொடருகிறது.
முன்னதாக அலெப்போவில் சிறைக் கைதிகளைக் கொன்றதாக கிளர்ச்சிக்கார ஆயுதக்குழுவினர் மீது எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிரியாவின் தேசியக் கவுன்சில் குற்றஞ்சாட்டியிருந்தது.