8/23/2012

| |

தமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்;


கி.மா.ச.வேட்பாளர் பூ.பிரசாந்தன்

தமிழ் தேசியம்இ மனித உரிமை மீறல்இ சர்வதேசத்தின் பார்வை என்றவாறு பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளர்கள் எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. அப்பாவி இளைஞர்களை கொலைக்களம் அனுப்பியவர்கள்இ தமிழ் தேசியத்திற்கு எதிராக மக்களைக் கொன்று குவித்தவர்கள் தமிழ் தேசியம் பேசுவதா? சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா? புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள்? இம் முறை த.தே.கூ.அதிதீவிர ஆதரவாளர்கள் கூட த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டுவார்கள்.
ஆனால் தொடர்ந்தும் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவரும் த.தே.கூ.வேட்பாளர்கள் மக்களால் நிரந்தரமாக அரசியலில் இருந்து துரத்தப்படுவார்கள்
அடிக்கடி பெய்கின்ற மழைக்கு முளைக்கின்ற காளான் போல் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்தித்து தேசியம் பேசி பின்பு வாக்குப் பெற்றவுடன் மக்களை மறக்கும் த.தே.கூ.அரசியல்வாதிகளுக்குள் இம் முறை போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைப் பார்த்து தேசியம் பேசுவதற்கு முன்பு தங்களது மறு பக்கத்தினை ஒருமுறை திரும்பிப் பார்ப்பார்களேயானால் அவர்களின் மனச்சாட்சி கூட குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்காது. பின்பு எப்படி உண்மைத் தமிழர்கள் இவர்களுக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்? என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிரான்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.