8/06/2012

| |

தமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித்தது என்ன?

தமிழ்த் தேசியம் பற்றி பேசி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக எதனை சாதித்துள்ளது. என்ன உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் நேற்று கேள்வி எழுப்பினார். இனவாதத்தை பேசி மேடை நாடகம் போடுவோரிடம் ஏமாந்து வாக்குகளை வீணாக்காமல் தமிழ் மக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்களின் நலன், பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு அரசுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் அருன் தம்பிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இங்கு மேலும் உரையாற்றுகை யில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பங்கு கொள்ளவில்லை. ஆனால் இம்முறை தேர்தலில் போட்டி யிடுகின்றது.
இதற்கான சந்தர்ப்பத்தையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வரு டங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படாத போதிலும் முன்னரை விட தமிழ் மக்கள் தற்பொழுது நிம்மதியுடனும் சந்தோசத் துடனும் வாழ்கின்றனர்.
2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இனவாதத்தை பேசி வாக்குகளை பெற்றுக் கொண்டார்களே தவிர இந்த மக்களுக்காக எதனை சாதிக்கவோ எந்த அபிவிருத்தி பணிகளை ஏற்படுத்தியோ கொடுக்கவில்லை.
இது அரசாங்கத்தை, ஆட்சியை ஏற் படுத்தும் ஒரு பொதுத் தேர்தல் அல்ல மாகாண அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு தேர்தலாகும்.
மாகாண சபை என்றாலே அங்கு பிரதான இடத்தை பிடிக்கின்றமை கல் வித்துறையாகும். எனவே கல்வித்துறை யில் எமது பிள்ளைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
எனவே, தமிழ் மக்கள் விழிப்புடனும், பொறுப்புடனும் செயற்பட்டு தமது வாக்குகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.