தேர்தல் கண்காணிப்பு
அமைப்பான கபே
கூறுகிறது
கிழக்கு மாகாணத்தில் ஒருசில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளபோதும்,
தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்கு மளவிற்கு எதுவித பாரிய வன்முறைச் சம்பவங்களும்
அங்கு இதுவரை இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருப்பதாக கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணிகளை அமைதியாக நடத்தக்கூடிய சூழ்நிலையே தற்பொழுது அங்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆங்காங்கே ஒருசில வன்முறைச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளபோதும், பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென கீர்த்தி தென் னக்கோன் தெரிவித்தார்.
அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான தேர்தல் சுவரொட்டிகள், கட்டவுட்டுக்கள் என்பன 99 வீதம் அகற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பொலிஸார் சிறப் பாகச் செயற்பட்டு வருகின்றனர். எனினும், அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் இன்னமும் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்ட வுட்டுக்கள் அகற்றப்படாமலிருப்பதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடை பெறவிருக்கும் நிலையில், தேர்தல்கள் நடைபெறவிருக்கு 7 மாவட்டங்களிலிருந்து இதுவரை 126 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலா னவை சட்டவிரோதமான தேர்தல் பிரசாரங்கள் பற்றியவை என்றும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.