அந்த 650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மதத் தலைவர் அதுவும் முக்கியமான ஒருவர் இவ்வாறு ஏன் உண்மைக்கு புறம்பானதொன்றை கூறுகின்றார். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான பிழையான புள்ளி விபரங் களை அவருக்கு வழங்குபவர்கள் எப்படி யானவர்களாக இருக்க முடியும். எனக்கும் ஆயர் அவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த வித பிரச்சினைகளும் இருந்ததில்லை. எப்போது வடக்கிலிருந்து இடம் பெய ர்ந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஆரம்பித்தேனோ அன்று தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இதனது பின்னணியில் பல சக்திகள் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது. நான் ஒரு முஸ்லிம் என்ற படியாலும், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்ற படி யாலும் இந்த அரசாங்கத்தில் ஓர் அமைச் சராக இருக்கின்றவன் என்றபடியாலும் என்னை பழிவாங்கும் ஒரு செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.