8/22/2012

| |

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் தொடர்ச்சியாக இணைந்து வரும் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள்

 கிழக்கில் உதித்தால் தான் வெளிச்சம். இங்கே இருள் சூழ்ந்தால் நிலைமை என்னவாகும்? நாம்  அதற்கு அனுமதிக்கலாமா? திரிசங்கு நிலையில் இன்று தமிழ் வாக்காளர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களும் தெளிவடைய வேண்டும் என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்நாள் தீவிரஆதரவாளரும் கூட்டமைப்பிற்காகப் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து உழைத்தவர்களில் ஒருவருமானஅருள் ஐயா அவர்கள் தெரிவித்தார்.
ஐயங்கேணி பிரதேசத்தில் நேற்று (18.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட அரசியல் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டு ஓட்டப் பந்தயவீரர் “உசைன் போல்ட்”. ஆனால் அவரைவிடவும் வேகமாக ஓடக் கூடியவர்கள் எமது ஐயங்கேணியில் இருக்கின்றார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? “சுற்றிவளைப்பு” கொழும்பிலே குண்டு வெடித்தாலும் ஐயங்கேணியில் சுற்றிவளைப்பு நடக்கும். இந்த சுற்றிவளைப்புக்களில் பிடிபடாமல் ஓட வேண்டும் அல்லவா? அப்படித்தான் எமது பிரதேசத்தவர்கள் ஓட்டப் பந்தய வீரர்களானார்கள்.
இந்த இருண்டயுகம் எமக்கு வேண்டுமா?
ஐயங்கேணி இன்றுஎப்படி இருக்கின்றது? இப்போது சுற்றிவளைப்புக்கள் இல்லவே இல்லை. அமைதி பிறந்திருக்கிறது. விடியும் வரைக்கும் வீதியில் துணிந்து நடமாடுகின்றோம். இவற்றினை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது யார்? இன்றுநான் இந்த ஐயங்கேணிப் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் மின்சாரவெளிச்சத்தில் நின்று பேசுகின்றேன் என்றால் அதற்கும் காரணம் எமது சந்திரகாந்தன் ஒருவர் தான். எனவேநாம் எமக்கு நிம்மதியைத் தேடித் தந்தவரை ஆதரிக்கப் போகின்றோமா? அல்லதுஅழிவுகளை ஏற்படுத்தித் தரும் கும்பலை ஆதரிக்கப் போகின்றோமா? நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.க.மோகன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு.சின்னாமாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரப் பயணங்களின் போது தமிழரசுக் கட்சிக்காய் முன்னின்று உழைத்த முக்கியஸ்தர்கள் பலரும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.