தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து
வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய
தொடர் கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப்
பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்
கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு
இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.
கிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக்
கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப்
பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும்
இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை
ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை,
தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு
நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின
பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் காலமாக
அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய அரசியல்
கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது.
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில்
அவர்களின் விருப்பு எதுவோ? அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை
கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள்
இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள்.
ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும்
மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால்
கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும்.
என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
பின்னால் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது கிழக்கு
மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான
பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள்.
கடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில்
பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்
கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக்
கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,
தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன,
செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட
பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென
வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும்
வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும்
12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால்
வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி
பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றால் மிகமிகக் குறைவு.
அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில்
சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள்
கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக
வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து
கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த
சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக்
காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை
வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை
அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை
அறிந்ததேயாகும்.
இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில்
பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது
வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர்
வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை
இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை
ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட
அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட
காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம்
அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள்
அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை
நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை
பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது
அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம்
என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு
இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை தெட்டத்ததெளிவாகப்
புலப்படுகின்றது.
அரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம்
தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே
சேதமாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும்
அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள்.
சித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை
தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள்
என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.
- ஆராவாணன் -